Friday, 16 December 2011

7 ஆம் அறிவு



மற்றவர்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து கொண்டிருந்த போது, சுய ஒழுக்கத்துடனும்,
வீரத்துடனும், அதிபுத்திசாலித்தனத்துடனும், தீர்க்கதரிசனத்துடனும் அதை விட அதிகமான தியாகத்துடனும் வாழ்ந்திருக்கிறார்கள் நம்முடைய பாட்டன் முப்பாட்டன்கள்.
நம் நாட்டினை தொடர்ந்து ஆண்டு கொண்டு இருந்த திராவிடக் கட்சிகள் நம்மைப் பெரியாருக்கு முன்பு செல்லவிடாமல் தடுப்பதிலேயே குறியாய் இருந்திருக்கின்றன. அதனால் நம் முன்னோர்களைப் பற்றிய அறிதலுமின்றி புரிதலுமின்றி நாம் நம்மையே மறந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒருவேளை சீனாக்காரய்ங்களிடம் இவய்ங்களும் காசு வாங்கியிருப்பாய்ங்களோ என்று சந்தேகப்பட வைக்கும் அளவிற்கு இன்றைய சூழல் நிலவுகிறது.

சந்தேகத்திற்கு இடமில்லாமல் சொல்லலாம். நாளை இந்த உலகை இக்கட்டான சூழ் நிலையிலிருந்து காப்பாற்ற ஒரு தமிழன் தான் வரவேண்டும். வேறு எவனாலும் முடியாது.தமிழன் தமிழனாக இருந்தால் தானே அவனால் கோலோச்ச முடியும். அதனால் தான் தமிழன் மூளைச்சலவை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறான் பல்வேறு வழிகளில். நம் பாரம்பரியங்களை நம்பவிடாமல் செய்யும் போலிப் பகுத்தறிவுவாதிகள் ஒரு பக்கம். அப்பாவித் தமிழனை ஆசைகாட்டி மதம்மாற்றும் மதவாதிகள் ஒரு பக்கம். சாதித் தீயைத் தூண்டிவிட்டு தன் வீடும் பற்றிக் கொள்ளப்போவது தெரியாமல் தகிடுதத்தோம் செய்யும் சாதீய அரசியல்வாதிகள்/தலைவர்கள் ஒரு பக்கம். மேற்கத்திய மோகம் கொண்டு மோகம் முற்றி போய் தாகம் தீராமல் அலைந்து கொண்டிருக்கும் இளைய சமுதாயம். மோகத்திற்காக இல்லாவிட்டாலும் பசிக்காக அவனை ஓட வைத்துக் கொண்டிருந்து கொண்டு சிந்திக்க விடாமல் செய்யும் நரகாசுர அரசியல்வாதிகள் ஒரு பக்கம். காசுக்காக துரோகம் செய்யும் அதிகாரிகள் ஒரு பக்கம். இதையெல்லாம் மீறி தமிழனால் வரமுடியுமா..? வந்தே ஆகவேண்டும் என்பதனை அடித்துச் சொல்லியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆம், அரவிந்தனை (சூர்யா) வைத்து டாங்லீயை(ஜானி) அடித்துச் சொல்லியிருக்கிறார். அரவிந்தனுக்குள் இருக்கும் போதிதர்மனின் பரம்பரை டி என் ஏ வை ஸ்ருதிஹாசனின் மூலமாக விழிக்கச் செய்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

1600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வீரத்தமிழனை விடுங்கள். இதோ நாம் வாழும் காலத்தில் ஒரு வீரத்தமிழன், அவனை அழிக்க இங்குள்ள முதுகெலும்பில்லாதவர்களின் பெருத்த ஆதரவோடு 7 நாடுகள் ஒன்று சேர வேண்டியிருக்கிறது.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியது போல 7 ஆம் அறிவு தமிழன் மறந்து போன மற்றவர்களுக்குக் கடவுளாகிப் போனத் தமிழனை ஞாபகப் படுத்தி தமிழர்கள் ஒவ்வொருவரையும் கர்வப்பட வைக்கிறது.

விஷம் கலந்த உணவு என்று தெரிந்தும், தன் உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டால் அங்கு எந்த தீங்கும் நேரிடாது என்று அங்குள்ளவர்கள் நம்புகிறார்கள் என்பதற்காக அந்த உணவினைச் சாப்பிட்டு சமாதியாகிப் போகும் போதி தர்மனின் தியாகம் மெய்சிலிர்க்க வைக்கிறது. பொது நலத்திற்காக சமாதியானவர்கள் சாமி ஆகிவிடுகிறார்கள். போதி தர்மனும் சீனா முழுமைக்கும் சாமி ஆகிவிடுகிறார். போதி தர்மனின் சிலை முன் வணக்கம் செலுத்தும் சீனாக்காரனைப் பார்க்கும் போது நமக்கு நிச்சயமாக கர்வம் தலைகேறுகிறது. தடுக்கி விழுந்தால்- அட இவ்வளவு ஏன் சிலைகள் தடுக்கித்தானே இங்கே நாம் விழவே வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு பார்க்கும் இடமெல்லாம் யார் யாருக்கெல்லாமோ சிலை இருக்கும் தமிழகத்தில் போதி தர்மனுக்கு ஒரு சிலை கூட கிடையாது!!!

பள்ளி மாணவர்களுக்குத் தேவையில்லாத பாடத்திட்டங்களைச் சேர்த்து அடுத்து வரும் அரசாங்கத்தால் அதனை ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டிய அளவிற்குப் பாடத்திட்டங்கள் தயாரிப்பவர்கள் போதி தர்மனை மறந்தது ஏனோ..? நம் நாட்டில் முதலில் மனிதக் காக்கைகள் ஒழிய வேண்டும் அல்லது ஒழிக்கப் பட வேண்டும்.

சூர்யா தான் ஏற்றுக் கொண்ட சவாலான கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். ஸ்ருதிஹாசன் அதிபுத்திசாலித்தனமான இளம் மரபணு விஞ்ஞானியாகச் சிறப்பாக நடித்திருக்கிறார். சாருஹாசன் கமல்ஹாசன் இருவரையும் சேர்ந்து செய்த கலவையாகச் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.சூர்யா, ஸ்ருதிஹாசனுக்கு யானையில் லிப்ட் கொடுப்பது அழகானக் கற்பனை, காட்சியாக்கம். ஆப்பரஷேன் ரெட் கொஞம் பலவீனமானக இருப்பது, அதனை முறியடிக்கச் செய்யும் போது நடக்கும் சம்பவங்கள், பொழுதுபோக்கிற்காகவேத் திணிக்கப்பட்டது போன்ற பாடல்காட்சிகள், அதான் சூர்யா நல்லா ஆடுபவர் என்று நிரூபிச்சிடார்ல அப்புறம் ஏன் சோகப்பாட்டுல கூட அவரை ஆட வைக்கவேண்டும்..? இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமோ…? இருந்தாலும் கருத்தினைச் சொல்லிய விதத்தில் 7 ஆம் அறிவு மிகச் சிறப்பான படமே.

ஒவ்வொரு தமிழனின் தாத்தாவோட தாத்தாவோட தாத்தோவோட தாத்தாவோட தாத்தாவோட தாத்தோவோட தாத்தாவோட தாத்தாவோட தாத்தாவோட தாத்தோவோட தாத்தாவோட தாத்தாவோட தாத்தாவும் ஏதாவது ஒரு வகையில் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்திருப்பவர்கள் தான் என்பதை உணர்ந்து இன்று அவர்களது டி.என்.ஏவுடன் வாழும் நாமும் சிறப்பாக வாழ முற்பட வேண்டும் என்கிற கட்டாயத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்படுத்தியிருக்கிறார்.

தமிழனாகத் தலை நிமிர்ந்து வாழ்வோம். இன்றும் மனிதனைக் கொன்று நரமாமிசம் உட்கொள்ளும் சீனக்காரன் 1600 வருடங்களுக்கு முன் எப்படி இருந்திருப்பான்..? யோசியுங்கள் அவர்களை இன்று மனிதனாக்கியப் பெருமை ஒரு தமிழனுக்குத்தான் என்பதில் நாம் எல்லாம் பெருமைப் படவேண்டாமா..? வாழ்வியல்,யோகம்,விஞ்ஞானம், மருத்துவம், வீரம், பண்பாடு, மொழியாற்றல் போன்ற அனைத்திலும் நாம் தான் முன்னோடிகள் அந்த வகையில் உலகில் மற்றவர்களுக்கு ஆறறிவு என்றால் தமிழனுக்கு நிச்சயம் ஏழறிவு என்பதனை உணர்த்தும் படமாக 7 ஆம் அறிவு.

No comments:

Post a Comment

ondragstart="return false" onselectstart="return false"