Monday, 6 February 2012

பதநீர்


இந்த பதநீர் ஒரு சைவ பானம் அது மட்டும் அல்ல நமது தமிழதேசிய பானம். இது கலப்படமில்லாமல் அருந்தினால் இதன் சிறப்பே தனி நம் நாட்டில் பெரிய அளவில் இதை உற்பத்தி செய்து மருத்துவத்திற்கு பயன்படுத்தினால் இதன் செயல்பாடுகள் அளப்பரியது பல்வேறு நோய்களை நீக்கவல்லது இந்த பதநீரிலும், பனை வெல்லத்திலும் எல்லாவித ஊட்ட சத்தும் உள்ளது.


250 மில்லி பதநீரில் உள்ள சத்துகள்


சக்கரை 28 .8 மி.கிராம்

காரம் 7 .0 மி.கிராம்

சுண்ணாம்பு சத்து 35 .4 மி.கிராம்

இரும்பு சத்து 5 .5 மி.கிராம்

பாசுபரசு 32 .4 மி.கிராம்

தயமின் 82 .3 மி.கிராம்

ரிபோபிலவின் 44 .5 மி.கிராம்

அசுகர்பிக் அமிலம் 12 .2 மி.கிராம்

நிகோடினிக் அமிலம் 674 .1 மி.கிராம்

புரதம் 49 .7 மி.கிராம்

கலோரிகள் 113 .3 மி.கிராம்

இதில் நார் சத்து மிகுந்திருப்பதால் பெண்களின் கருக்கலத்தில் / பேரு காலத்திற்குப்பின் உண்டாகும் மலச்சிக்கலை நீக்குகிறது. எல்லோரின் இதயத்தை வலுப்படுத்துகிறது . இதில் உள்ள சுண்ணாம்பு சத்து எலும்புகளை வலுபடுத்துகிறது.


இரத்தகடுப்பு

வெந்தயத்தை 50 கிராம் எடுத்து லேசாக வறுத்து பொடித்து காலை,மாலை இருவேளை 50 மிலி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி அருந்திவர இரத்த கடுப்பு .மூல சூடு தணியும். அதேபோல மஞ்சளை பொடித்து அரை தேக்கரண்டி 50 மிலி காலையில் இறக்கிய பதநீரில் கலக்கி உட்கொள்ள வயிற்று புண் தொண்டைப்புண் ,வெப்ப கழிச்சல் , சீத கழிச்சல் நீங்கும் .


மாதவிடாய்தடை

மாதவிடாய் தடைபட்டு அதனால் கருப்பை சார்ந்த வலி . வாய்வு , காட்டி முதலியவற்றினால் பெண்கள் அவதிபடுவார்கள் அது மட்டும் அல்லாமல் இந்த காலத்தில் மார்பகம் விம்மி பருத்து ஒருவிதமான சன்னி நோய் போல உண்டாகும் இந்த நோய்களுக்கு பனையின் குருத்தை அதன் உள்பகுதியை உட்கொண்டால் மாதவிடாய் சிக்கலின்றி வெளியேறி நோயை நீக்கும் .

பாலுணர்வை கூட்டிட

இதில் இயல்பாகவே அனைத்து சத்துகளும் நிரம்பி இருப்பதால் பாலுணர்வை கூட்டுகிறது என்கிற மருத்துவ குரிப்புகளும் காண கிடைக்கிறது.


தொழு நோயை நீக்கும் பதநீர்

நாளும் ஒரே பனை மரத்தில் இருந்து பதநீர் இறக்கி காலை,மாலை அருந்தி பனைஓலைப்பாயில் படுத்து பனைவிசிரியியை பயன்படுத்தி பனைஓலையில் உணவு உண்டு பனைஓலை குடுசையில் 96 நாள்கள் தாங்கி இருந்தால் தொழு நோய் நீங்கும் என ஒருமருத்துவ் குறிப்பு உண்டு .

No comments:

Post a Comment

ondragstart="return false" onselectstart="return false"