Thursday, 29 December 2011

வாழ்க்கையில் ..........

வாழ்க்கையில் சிலரை மறக்க முடியாது.
சிலரை பிரிய முடியாது.
மறக்காமல் நீயிரு.
பிரியாமல் நானிருக்கிறேன்...

Monday, 26 December 2011

Where two oceans meet... but do not mix ! INCREDIBLE AND SIMPLY MIND-BLOWING!!!



Where two oceans meet... but do not mix ! INCREDIBLE AND SIMPLY MIND-BLOWING!!!

These two bodies of water were merging in the middle of The Gulf of Alaska and there was a foam developing only at their junction. It is a result of the melting glaciers being composed of fresh water and the ocean has a higher percentage of salt causing the two bodies of water to have different densities and therefore makes it more difficult to mix.

Thursday, 22 December 2011

அசைவ உணவால் ஏற்படும் தீமைகள்!

நாகரிகம் தெரியாத காலத்தில் காட்டு மிராண்டியாகத் திரிந்த மனிதன் கிடைத் ததை உண்டு உயிர் வாழ்ந்தான். அவனுக்கு உயிர் வாழ உணவு தேவை என்றளவே தெரிந் திருந்தது. நாளாக நாளாக நிலத்தைப் பண்படுத்தி, சாகுபடி செய்யக் கற்றுக் கொண்ட பின், அவனது உணவிலும் மாற்றம் ஏற்பட்டது. தானியங்கள், காய்கறிகள் பழங்களைச்  சாப்பிட ஆரம்பித்தான். நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டு உணவைச் சமைத்து சாப்பிட முடியும் என்பதைத் தெரிந்து கொண்டதும் சைவ உணவை அதிகமாக உட்கொள்ளத்  துவங்கியதும், விவசாயமும் வளர ஆரம்பித்தது. கால்நடை களைக் கொன்று தின்பதற்குப் பதில் அவற்றை விவசாய வேலைகளுக்குப் பயன் படுத்தவும் அவற்றிடமிருந்து  கிடைக்கும் பால், தயிர் போன்றவற்றை உணவாக அருந்தவும் தெரிந்து கொண்டதும், கால்நடை களை வளர்க்க ஆரம்பித்தான். ஆடு, மாடு களின் மாமிசத்திற்குப் பதில்  சுவை தரும் பால் பெரும்பாலோரது உணவாகியது.
ஆனால், கடந்த சில நூற்றாண்டுகளாகத் தான், ஜனத்தொகை அதிகரிக்க ஆரம்பித் ததும், உணவின் தேவையும் பெருகவே அவன் தாவர உணவுக்கு மாற்றாக வேறு  உணவை நாட வேண்டியதாயிற்று. மீண்டும் அசைவ உணவில் அவன் நாட்டம் திரும்பியது.
விஞ்ஞான அறிவு வளர ஆரம்பித்ததும் தாவர உணவில் கிடைக்கும் புரதச் சத்தை விட மிக அதிகளவு புரதமும், அமினோ அமிலங்களும் (மாமிச உணவில்) இருப்பதை  அறிந்து மனிதர்களுக்கு அது தேவையான உணவாகியது.
ஆனால், சமீபத்தில் நடத்திய ஆய்வுக ளிலிருந்து மாமிச உணவில் புரதமும், அமினோ அமிலங்களும் அதிகம் இருந் தாலும், அதனால் உடலுக்குத் தீமைகளும் அதிகம்  விளைகின்றன என்று கண்டறியப் பட்டது.
நாம் சாப்பிடும் உணவைப் பொறுத்தே உடல் நலமும் அமைகிறது. இரைப் பையில் ஜீரண நீர் சரியாக சுரக்க இந்தப் புரதமும், அதை ஜீரணிக்கும் சத்துக்களும் முக்கியப்  பங்கு வகிக்கின்றன. மாமிச உணவு சிறுகுடலில் தங்கி சரியாக ஜீரண மாகாமல் ஜீரண நீர் அதிகம் சுரக்க வேண்டியிருப்பதால் குடல் பகுதியை அந்த அமிலங்கள் பெரி தும் பாதிக் கின்றன. குடலில் ஜவ்வு போன்ற மெல்லிய பகுதிதான் குடலைப் பாதிப் படையாமல் பாதுகாக்கிறது. இந்த அமில நீர் அதிகம் சுரப்பதால் ஜவ்வுப் பகுதிகள்  அரிக்கப்பட்டு அதனால் குடல் புண் (அல்சர்) உண்டாகிறது.
மாமிச உணவில் அதிகம் உள்ள இந்த புரதச்சத்து அதிகளவில் ஜீரண நீர் சுரக்கக் காரணமாக இருப்பதால் ஜவ்வுப் பகுதி யில் உள்ள க்ளைகோ புரதத்தைப் பாதித்து  மியூகஸ் ஜெல் என்ற ஜவ்வு சேதமடைந்து பெப்டிக் அல்சர் குடல்புண் ஏற்பட காரணமாகிறது.
தவிர, மாமிச  உணவைத் தயாரிப்ப தற்கு மசாலாப் பொருள்களை அதிகம் பயன் படுத்துவதாலும், மாமிச உணவுடன் சேர்த்து மதுபானங்களை அருந்துவதாலும் மேலும்  தீங்கை விளைவிக்கிறது.
உணவுக் குழாய், வயிற்றுப் பகுதி, குடல் பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய் நமது உணவின் தன்மைக்கு ஏற்ப அமை கிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகள், சில வகை மீன் கள், அதிகளவு உப்பு சேர்க்கப் பட்ட உணவுகள் முதலான நைட்ரோ அமினோ அமிலச் சத்துக்கள் அதிகம் உள்ள உணவாலும் அண்ணக்குழாய், இரைப்பை பகுதிகளில்  புற்றுநோய் ஏற்பட ஏதுவாகிறது.புரதமும், கொழுப்புச் சத்தும் மிகுந்த, நார்ச்சத்து  அதிகமில்லாத   உணவுகளா லும், பெருங்குடலில் அல்சர் நோய் வருவதற் கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. அதிலும்  முக்கியமாக அசைவ உணவுகளில் இந்த தீமை அதிகமாகிறது.
நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகள் காரணமாக மலச்சிக்கல் ஏற்பட்டு மலம் சரியாகக் கழியாமல் குடல் பகுதி தடித்து வீங்கல் காரணமாக ஜவ்வுப் பகுதி அரிக்கப்பட்டு அல்சர் ஏற்படுகிறது.
தவிர, விலங்குகளிலிருந்து கிடைக்கும் மாமிச உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தி யைக் குறைக்கவும் செய்கிறது. உணவு ஒவ்வாமை (அலர்ஜி) உடலுக்கு சில வகை உணவு கள் ஒத்துக்கொள்ளாமல் போவது காரணமாகவும் நோய் ஏற்பட வழிபடுத்துகிறது.
மூட்டு வலிகள் பற்றி கடந்த சில காலமாக ஆராய்ந்து பார்த்ததில் அசைவ உணவைத் தவிர்த்து சைவ உணவை உட்கொள்ளும்போது நோயின் தீவிரம் குறைவதைக் கண்டறிந்துள்ளனர்.
சிலவகை அலர்ஜி நோய்கள் ஏற்படு வதற்கும் அசைவ உணவே காரணம் என்பதையும் கண்டறிந்துள்ளனர். மாமிச உணவை ஜீரணிக்கையில் சில நச்சுப் பொருட்களும்  வெளிப்படுகின்றன. இதனால் சில நோய்கள் ஏற்படுகின்றன.
மாமிச உணவால் உடலுக்கு அதிக சத்து கிடைக்கிறது. கலோரிச் சத்து அதிகம் உள்ளது. கொழுப்பும், புரதமும் மிகுந்து காணப்படுகிறது. என்றாலும், சில தீய விளைவு களும் அதனால் ஏற்படு கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
மேனாட்டு ஆராய்ச்சியாளர் ஒருவர் தமது உடம்பில் காயங்கள் ஏற்படுத்தி சில காலம் மாமிச உணவைச் சாப்பிட்டு வந்தபோது, புண் ஆறாமல் இருந்ததைக் கண்டார்.  பின் சைவ உணவுக்கு அவர் மாறியதும் விரைவில் குணம் ஏற்பட்டதை அறிந்தார்.
சரும நோய்கள், அலர்ஜி நோய்கள், ஆஸ்துமா போன்ற வியாதிகள் உள்ளவர் களுக்கு மாமிச உணவால் பெருமளவு தொந்தரவு ஏற்படுவதை அறிந்து இயற்கை மருத்துவ  நிபுணர்கள் மாமிச உணவைத் தவிர்க்கும்படி பரிந்துரை செய்கின்றனர்.
புலால் உணவால் விலங்கு உணர்வு களே மிகுந்து காணப்படுகின்றன. கொலை வெறித்தாக்குதல் போன்ற ராட்சச குணங்கள் மேலோங்குவதற்கு அசைவ உணவை உட் கொள்வதே காரணமாகும். மாறாக சைவ உணவை அருந்துபவர்களிடம் அன்பு, கருணை, கனிவு போன்ற தெய்வீக குணங்கள் நிறைந்திருப்பதுடன், சைவ உணவை உட் கொள்பவர்கள் அறிவாற்றல் மிக்கவர்களாகவும் விளங்குகின்றனர்.
அண்மைக்காலமாக மேலை நாடு களில் அசைவ உணவைத் தவிர்த்து சைவ உணவையே உட்கொள்ளுமாறு தீவிர பிரசாரம் நடந்து வருவது கண்கூடு. சைவ உணவின்  சிறப்பை உணர்ந்துதானோ, வள்ளுவரும் புலால் மறுத்தல் என்ற அதிகாரத்தில் புலாலைத் தள்ளும்படி வலியுறுத்தி யிருப்பதைக் காணலாம். ‘கொல்லான், புலால் மறுத்தானை  கைகூப்பி எல்லா உயிரும் தொழும்’ என்று அவர் சிறப் பித்துக் கூறுகிறார்.

கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி ?

செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் இன்றை உலகில் ஒரு அத்தியாவசிய ‘கருவியாகி’ யாவரும் பயன்படுத்தியே தீர வேண்டியுள்ள நிலையில், செல்போன் கதிர் வீச்சிலிருந்து முழுவதுமாக தப்ப இயலாது.
ஏனெனில், நீங்க செல்போன் பயன் படுத்தா விட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் பாதிக்கவே செய்யும். குருவிகள் இதனால் தான் நகர்ப்புரங்களிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.
இந்நிலையில், கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது நமக்கும் நமது குடுமபம் மற்றும் சந்ததியினருக்கும் சிறந்த விடயமாக இருக்கும்.
இதில் கவனிக்க வேண்டிய விடயம் இந்த கைத்தொலைபேசிகளில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.
இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான(Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விடயம் நாம் கைத்தொலைபேசி உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.
1. முடிந்த அளவு கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட கைத்தொலைபேசிகள் பாதிப்பு அதிகம்.
2. ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.
3. குழந்தைகளிடம் கைத்தொலைபேசிகளின் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.
4. உங்கள் கைத்தொலைபேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.
5. காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட கைத்தொலைபேசிகளின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.
6. தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.
7. நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஓன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.
8. கைத்தொலைபேசிகளில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.
9. கைத்தொலைபேசிகளில் விளையாடுவதை முடிந்த அளவு தவிர்க்கவும். முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
10. கைத்தொலைபேசிகளை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.
11. கைத்தொலைபேசிகளை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.
12. கைத்தொலைபேசியில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.

Wednesday, 21 December 2011

love thought

தூசி பட்ட கண்களும்...
காதல் பட்ட இதயமும்...
எப்போழுதும் கலங்கி கொண்டே தான் இருக்கும் ...

Tuesday, 20 December 2011

கௌதம புத்தரின் வாழ்வும், போதனைகளும்

ஆசையே" துன்பத்திற்கு அடிப்படைக் காரணம் என்னும் தத்துவத்தை உலகிற்கு போதித்தவர் கௌதம புத்தர். உலக மகா ஞானிகளில் தனக்கென தனி இடம் பிடித்தவர். பௌத்த மதம் என்னும் சமயத்தை தோற்றுவித்து மக்கள் யாவரும் முக்தி அடைய ஒரு எளிதான வழியைக் காட்டியவர். புத்தரின் போதனைகளைப் பின்பற்றுவோர் பௌத்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது அனைவருமே கௌதம புத்தர் அவதரித்த நாளைக் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு மே 23-ம் தேதி (திங்கட்கிழமை - 23.05.2005) அன்று புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.

புத்தரின் பிறப்பு :

கபிலவஸ்து அருகிலுள்ள லும்பினிக் கிராமத்தில் கி.மு. 566-ல் சாக்கிய குலத்தில் பிறந்தார் கௌதம புத்தர். பெற்றோர் அவருக்கு சித்தார்த்தர் என்று பெயரிட்டு அழைத்தனர். அவருடைய தந்தை சுத்தோதனர். தாயார் மாயாதேவி. சாக்கிய குலத்தைச் சேர்ந்த சுத்தோதனர், கபிலவஸ்துவைத் தலைநகரமாகக் கொண்ட சாக்கிய நாட்டின் மன்னராவார். கபிலவஸ்து நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ளது. புத்தர் பிறப்பிடம் அசோக மௌரியர் எழுப்பிய ரும்மிந்தைத் தூண் சின்னத்தால் பிரசித்திப் பெற்று விளங்குகிறது.

புத்தர் பிறந்த ஏழாவது நாளில் சுத்தோதனர் இயற்கை எய்தினார். பின்னர் புத்தர் தன் அத்தையான பிரஜூபதி கௌதமியால் வளர்க்கப்பட்டார். இளமைப் பருவத்தில் யசோதரா என்னும் மங்கையை மணந்து இல்லற வாழ்க்கையை நடத்தினார். இவருக்கு ராகுல் என்ற மகன் பிறந்தான்.

சில காலங்களுக்கு பிறகு புத்தருக்கு அரண்மனை வாழ்க்கை பிடிக்கவில்லை. அமைதியை இழந்தார். இவ்வுலக வாழ்க்கையில் கண்ணுற்ற துன்பங்களைப் பற்றி ஆராயத் தொடங்கினார். ஒரு நாள் இவர் வெளியே சென்றுக் கொண்டிருந்தபோது கண்ட காட்சிகள் இவர் மனதை வெகுவாக புண்படுத்தின. வயது முதிர்ந்த ஒரு மனிதரையும், நோயாளி ஒருவரையும், பிணம் ஒன்றையும், துறவி ஒருவரையும் கண்டார். இதனால் மனம் கலங்கினார். இதற்கு முன்னால் இது போன்ற காட்சிகளையும் இவர் நேரில் கண்டதில்லை. ஆகையால் இத்தகைய காட்சிகள் இவரது சிந்தனைகளை வெகுவாகத் தாக்கியது.

துறவறம் :

உலக வாழ்க்கையில் காணப்படும் துன்பங்களைப் பற்றியும், அதற்குப் பின்னர் என்ன நடைபெறும் என்பது பற்றியும் தீவிரமாக ஆராயத் தொடங்கினார். இத்தகைய துன்பங்களுக்கு நிவாரணம் காண வேண்டும் என்பதே தனது லட்சியமாகக் கொண்டார். எனவே இல்லற வாழ்க்கையை துறக்க தீர்மானித்தார். தனது 29-வது வயதில் கடும் துறவறத்தை புத்தர் மேற்கொண்டார். உண்மையைக் காண்பதே தனது முதன்மையான பணி எனக் கருதி, எல்லாவற்றையும் களைந்துவிட்டு அலைந்து திரியும் துறவியின் வாழ்க்கையை மனம் உவந்து மேற்கொண்டார்.

துறவிக்கோலம் பூண்ட புத்தர், வாழ்க்கையைப் பற்றியும் மரணத்திற்குப் பின்னர் நடைபெறுவது பற்றியும் அறிய விரும்பினார். இதற்காக இவர் முதலில் வைசாலியில் தங்கியிருந்த அலாரர் என்பவரிடம் பாடங்களைக் கேட்டறிந்தார். பின்னர் இராஜகிரகத்தில தங்கியிருந்த ஆசிரியரான உருத்திரிகா என்பவரிடம் சீடராக அமர்ந்தார். அவருடைய போதனை புத்தரை வெகுவாக கவரவில்லை. எனவே அவரை விட்டு விலகிச் சென்றார்.

பின்னர் கௌதமர் உருவேலா என்னும் இடத்தில் உணவு இன்றி கடும் தவம் மேற்கொண்டார். சுமார் 6 ஆண்டுகள் இவ்வாறு கழிந்தது. எனினும் தமது லட்சியத்தை அடைவதற்கு இது பயனற்றது என அறிந்தார்.

ஞானோதயம் :

பிறகு நைரஞ்சனா ஆற்று கால்வாயொன்றில் புனித நீராடி இக்கால போத்-கயா என்னுமிடத்திலுள்ள பிப்பல் அல்லது அரச மரத்தடியில் அமர்ந்தார். இறுதியில் அங்கு அவருக்கு உயர்வான ஞானம் புத்தொளி தோன்றியது. தனது 36-வது வயதில் ஞானோதயம் பெற்று நிர்வாணத்தை அடைந்தார்.

அன்று முதல் இவர் "புத்தர்" அல்லது ஒளிபெற்றவர் என்றும் "ததாகதர்" (உண்மையை அறிந்தவர்) என்றும், சாக்கியமுனி அல்லது சாக்கிய வம்சத்து முனிவர் என்றும் பல பெயர்கள் சொல்லி அழைக்கப்பட்டார்.

"புத்தன்" என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்", "ஒளியினைக் கண்டவன்" என்று பொருள். தன் ஆசையையும், அகந்தையையும் வெற்றி கொண்டார். "தான்", "தனது" என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே "நிர்வாணம்" அல்லது "நிர்வாண நிலை" என்று சொல்லுவார்கள்.

கொள்கைகள் :

ஒளி பெற்ற புத்தர், வாரனாசியின் அருகாமையிலுள்ள சாரநாத் என்னுமிடத்திலுள்ள "மான் பூங்கா" என்னுமிடத்தில் தன் கொள்கையை போதிக்கத் தொடங்கினார். 45 ஆண்டுகள் அயோத்தி, பீகார், அதையடுத்த பகுதிகளின் மக்களுக்கும், மன்னருக்கும் தாம் கண்ட பேருண்மையை ஊர் ஊராகச் சென்று பரப்பினார். இராஜகிரகத்தில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது போதனைகளை நடத்தி வெற்றிகண்டார்.

கபிலவஸ்துவில் ராகுல், மகா பிரஜாபதி ஆகியோரை தன் சமயத்தில் சேர்த்துக் கொண்டார். மகத மன்னர்களான பிம்பிசாரர், அஜாதசத்துரு ஆகியோர்களை பௌத்த சமயத்தை தழுவும்படி செய்தார். கோசல நாட்டிற்கும் சென்று பலரை பௌத்தத்தை தழுவிட வழிகோலினார்.

இந்த இடங்களிலெல்லாம் அவரது நான்கு உண்மைகளையும், "நான்கு அதிசய சத்தியங்களையும்", "எண் வகை வழிகளையும்" கூறினார். பிறகு தனது 80-வது வயதில், குசி நகரத்தில் கி.மு. 486-ல் உயிர் நீத்தார்.

கி.மு. 3-ம் நூற்றாண்டு வட இந்தியா, கிழக்கிந்தியா, ஸ்ரீலங்கா ஆகிய இடங்களில் புத்த மதம் பரவி இருந்தது. கி.பி. முதலாம் நூற்றாண்டில் புத்தமதம் கிழக்கு நாடுகளுக்கு பரவியது. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திபெத்திற்குச் சென்றது.

புத்தரின் போதனைகள் :

புத்த சமயக் கொள்கைகளைச் சுத்த பிதகம் கூறுகின்றது. மனத் துயரிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் விடுபடுவதே பௌத்த சமயத்தின் முக்கிய நோக்கமாகும். தன்னலம் துன்பங்களுக்கெல்லாம் காரணமாக இருக்கிறது. ஆசையை ஒழித்தால் தான் மன அமைதியும், ஆனந்தமும் அடைய முடியும். தீமைகளை தவிர்த்து நன்மைகளைச் செய்து வந்தால் ஆசை அகன்றுவிடும்.

"நான்கு உயரிய உண்மைகளும்", "எண் வகை வழிகளும்" பிறவி என்பது ஒருவரது செயலினால் ஏற்படும் பயன் என்ற கோட்பாடும் தத்துவ இயலுக்கு புத்தர் ஆற்றிய அரிய தொண்டாகும்.

நான்கு உண்மைகள் :

1. துன்பம் : இவ்வுலக வாழ்க்கை துன்பகரமானது. ஏழ்மை, நோய், மூப்பு, இறப்பு முதலியவை நிறைந்த உலக வாழ்க்கை, எளிதில் விலக்கிக் கொள்ள முடியாத துன்பம் நிறைந்தது. இவை நம்மை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

2. அதன் தோற்றம் : சிற்றின்ப ஆசையே துன்பத்தின் காரணம். தான் இன்பமாக வாழ வேண்டும் என்ற தன்னலம் கலந்த ஆசையே துன்பங்களுக்கு காரணமாகும்.

3. அதை ஒழித்தல் : ஆசை ஒழிக்கப்பட்டாலொழிய துன்பத்தை ஒழிக்க முடியாது.

4. அட்டசீலம் : (எண்வகை வழி) துன்பத்தை ஒழிக்கும் வழி இதுவேயாகும். எண்வகை வழிமுறைகளை கடைபிடித்தால் ஆசைகளை ஒழித்துவிடலாம்.

நடுவு நிலை வழி, இடை வழி : புத்தர் கூறிய சமய முறையில் ஆசையை அறவே ஒழித்து, பல்வகையான வாழ்க்கையின் மீது நாட்டம் கொள்ளாமல், வாழ்க்கையில் ஆசையால் விளையும் துன்பங்களை ஒழிப்பதே நிர்வாணமாகும்.

இடைவழி : ஆழ்ந்த அறிவு, விவேகம், புலமை, அமைதி, நிர்வாணம் ஆகியவற்றை அடையச் செய்கின்றன. இடைவழியில் எட்டு கொள்கைகள் உள்ளன. இதற்கு "அட்ட சீலம" அல்லது "எண் வகை வழிகள்" என்று பெயர்.

அட்டசீலம் அல்லது எண்வகை வழிகள் :

1. நல்ல நம்பிக்கை : நான்கு உண்மைகளில் நம்பிக்கைக் கொள்ளுதல்.

2. நல்லெண்ணம் : இல்லற வாழ்க்கையை விட்டொழிக்கவும், சினத்தை அகற்றவும், ஒருவருக்கும் தீமை செய்யாமலிருக்கவும் தீர்மானித்தல்.

3. நல்வாய்மை அல்லது நல்லமொழி : பயனற்றதும், கடுமையானதும் பொய்யானதுமான சொற்களை கூறாதிருத்தல்.

4. நற்செய்கை : பிறரை துன்புறுத்தாமலும் (அகிம்சை) களவாடாமலும் நன்னெறி தவறாமல் இருத்தல்.

5. நல்வாழ்க்கை : பிச்சை எடுத்து வாழ்தல்.

6. நன் முயற்சி : தீமையை அகற்றி நற்குணங்களை வளர்த்தல்.

7. நற்சாட்சி : சிற்றின்ப ஆசையையும், துன்பத்தையும் அடையாவண்ணம் விழிப்புடனிருத்தல்.

8. நல்ல தியானம் : லட்சியத்தை (குறிக்கோளை) அடைய மனம் ஒருவழிபட்டு சிந்தித்தல்.

சுருக்கமாகக் கூறினால், புத்தருடைய அறிவுரைகளில் நம்பிக்கையுடன் அவற்றை அறியவும், அதன்படி நடக்கவும் முயன்று ஒழுக்கம் தவறாத நடத்தையுடன் மனதை ஒருவழிபடுத்தி இறுதியான இன்பத்தை (வீடு, மோட்சம்) அடைய வேண்டுமென்பதாகும்.

அவரது காலக் கட்டத்தில் இந்திய தத்துவ இயலில் ஆதிக்கம் செலுத்தி வந்த கடவுள், ஆன்மா, மாறாத நிலையான உண்மை அல்லது வஸ்து போன்ற கருத்துகளை அறிவார்த்த முறையில் களைந்து உலகம், வாழ்க்கை, சிந்தனை குறித்த முற்றிலும் மாற்றான கருத்துகளை முதன் முதலில் பறை சாற்றியவர் புத்தர் என்றால் அது மிகையாகாது.

என் அம்மாவிற்கு எழுதிய பிறந்த நாள் வாழ்த்து

எத்தனை சொந்தம் என் வாழ்வில்
வந்தாலும் அம்மா
உன் ஒற்றை பார்வையின் பந்தம்
எதுவும் தந்ததில்லை  

உன் கண்ணீரை எல்லாம் சிரிப்பில்
மறைத்தாய் அம்மா
இத்தனைநாளும் அது எனக்கு
விளங்கியதில்லை  

நான் வளரும் ஒவ்வொரு நொடியும்
உனக்கு பாரம் தான்
தெரிந்தும் சுமக்கிறாய்
பத்து மாதம் வரை அல்ல
உன் ஆயுள் காலம் வரை

உன் காலம் நரைக்கும் நேரத்தில்

என் நேரம் உனக்காய்
இருக்க போவதில்லை
தெரிந்தும்
காக்கிறாய் உன்
இமைக்குள் வைத்து என்னை
கடமைக்காக அல்ல
கடனுக்காக அல்ல
கடவுளாக

உன் வாழ்வின் ஒரு பாதி

உன் பெற்றோருக்காய்
மறு பாதி உன் பிள்ளைகளுக்காய்
மனதார பகிர்ந்தளித்து விட்டாய்
என்றாவது உனக்காய் வாழும்
உத்தேசம் உண்டா

உன் அன்னைக்கு என்ன கைமாறு

செய்தாலும் உன்னை எனக்கு
தந்ததிற்கு ஈடாய்
ஒன்றும் செய்ய இல்லாமல்
முடமாய் நிற்கிறேன்  

ஏழு ஜென்மங்களில் நம்பிக்கை இல்லை
இனி ஒரு ஜென்மம்

இருந்து உயிரினமாய் பிறந்தால்
உன்னை எந்தன் மகளாக்கும் பாக்கியம்
மட்டும் போதும்

ஒரே ஒரு வேண்டுகோள் உன்னிடம்

இன்று மட்டுமாவது
உனக்காய் வாழ முயற்சி செய்

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கை

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
 
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
 
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
 
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
 
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
 
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
 
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
 
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
 
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
 
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
 
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
 
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்

Monday, 19 December 2011

அன்பே சிவம்.....

யார் யார் சிவம்? நீ நான் சிவம்,
வாழ்வே தவம், அன்பே சிவம்,

ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்,
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்,

அன்பே சிவம், அன்பே சிவம், என்றும்,
அன்பே சிவம், அன்பே சிவம், எங்கும்,

இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்,
ஆன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்,

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா,
மனதின் நீளம் எதுவோ, அதுவே வாழ்வின் நீளமடா,

யார் யார் சிவம்? நீ நான் சிவம்,
வாழ்வே தவம், அன்பே சிவம்,

படம்        -    அன்பே சிவம்
வரிகள்   -    வைரமுத்து

ஓசோவின் சிந்தனைத்துளிகள்

பொருட்கள் இடங்களை மனிதர்கள் பற்றிக்கொள்வதால் தான் துயரம் வருகிறது பற்றுதல் அகலும் போது துயரம் விலகுகிறது.

கபடமற்றவராக இருப்பது அடுத்த நபரும் இதே குணநலன்களைத்தூண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

வீண் சிந்தனையில் வீணாக்கும் சக்தியை விழிப்புணர்வாக உருமாற்றம் செய்யுங்கள்.

எப்போதும் உங்களை வழிநடத்துவதில் நீங்கள் எஜமானனாய் இருங்கள்.

உண்மையைத்தேடாதே உண்மையாக மாறு.

எல்லாக்கணங்களும் பாக்கியமானவையே நீங்கள் ஆழமான நன்றியுணர்வுடன் ஏற்றுக்கொள்ளும் போது எதுவும் எப்போதும் தவறாக நடக்காது.

வாழ்வதற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யுங்கள்

ஆணவம் மறைகின்ற கணத்தில் எல்லா இரகசியங்களும் திறந்து விடுகின்றன.

விழிப்புணர்வு ஒன்றே எனது மதிப்பிற்கு உரியது.மற்றவை எல்லாம் அர்த்தம் அற்றவை

ஒவ்வொரு கணத்தையையும் இதுவே கடைசிக்கணம் என்பதைப்போல வாழுங்கள் ,யாருக்கும் தெரியாது இதுவே கடைசியாகவும் இருக்கலாம்.

nice art

Friday, 16 December 2011

AmAZinG SonG from TaMiL Ma

கணவன்- மனைவி நகைச்சுவை

7 ஆம் அறிவு



மற்றவர்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து கொண்டிருந்த போது, சுய ஒழுக்கத்துடனும்,
வீரத்துடனும், அதிபுத்திசாலித்தனத்துடனும், தீர்க்கதரிசனத்துடனும் அதை விட அதிகமான தியாகத்துடனும் வாழ்ந்திருக்கிறார்கள் நம்முடைய பாட்டன் முப்பாட்டன்கள்.
நம் நாட்டினை தொடர்ந்து ஆண்டு கொண்டு இருந்த திராவிடக் கட்சிகள் நம்மைப் பெரியாருக்கு முன்பு செல்லவிடாமல் தடுப்பதிலேயே குறியாய் இருந்திருக்கின்றன. அதனால் நம் முன்னோர்களைப் பற்றிய அறிதலுமின்றி புரிதலுமின்றி நாம் நம்மையே மறந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒருவேளை சீனாக்காரய்ங்களிடம் இவய்ங்களும் காசு வாங்கியிருப்பாய்ங்களோ என்று சந்தேகப்பட வைக்கும் அளவிற்கு இன்றைய சூழல் நிலவுகிறது.

சந்தேகத்திற்கு இடமில்லாமல் சொல்லலாம். நாளை இந்த உலகை இக்கட்டான சூழ் நிலையிலிருந்து காப்பாற்ற ஒரு தமிழன் தான் வரவேண்டும். வேறு எவனாலும் முடியாது.தமிழன் தமிழனாக இருந்தால் தானே அவனால் கோலோச்ச முடியும். அதனால் தான் தமிழன் மூளைச்சலவை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறான் பல்வேறு வழிகளில். நம் பாரம்பரியங்களை நம்பவிடாமல் செய்யும் போலிப் பகுத்தறிவுவாதிகள் ஒரு பக்கம். அப்பாவித் தமிழனை ஆசைகாட்டி மதம்மாற்றும் மதவாதிகள் ஒரு பக்கம். சாதித் தீயைத் தூண்டிவிட்டு தன் வீடும் பற்றிக் கொள்ளப்போவது தெரியாமல் தகிடுதத்தோம் செய்யும் சாதீய அரசியல்வாதிகள்/தலைவர்கள் ஒரு பக்கம். மேற்கத்திய மோகம் கொண்டு மோகம் முற்றி போய் தாகம் தீராமல் அலைந்து கொண்டிருக்கும் இளைய சமுதாயம். மோகத்திற்காக இல்லாவிட்டாலும் பசிக்காக அவனை ஓட வைத்துக் கொண்டிருந்து கொண்டு சிந்திக்க விடாமல் செய்யும் நரகாசுர அரசியல்வாதிகள் ஒரு பக்கம். காசுக்காக துரோகம் செய்யும் அதிகாரிகள் ஒரு பக்கம். இதையெல்லாம் மீறி தமிழனால் வரமுடியுமா..? வந்தே ஆகவேண்டும் என்பதனை அடித்துச் சொல்லியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆம், அரவிந்தனை (சூர்யா) வைத்து டாங்லீயை(ஜானி) அடித்துச் சொல்லியிருக்கிறார். அரவிந்தனுக்குள் இருக்கும் போதிதர்மனின் பரம்பரை டி என் ஏ வை ஸ்ருதிஹாசனின் மூலமாக விழிக்கச் செய்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

1600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வீரத்தமிழனை விடுங்கள். இதோ நாம் வாழும் காலத்தில் ஒரு வீரத்தமிழன், அவனை அழிக்க இங்குள்ள முதுகெலும்பில்லாதவர்களின் பெருத்த ஆதரவோடு 7 நாடுகள் ஒன்று சேர வேண்டியிருக்கிறது.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியது போல 7 ஆம் அறிவு தமிழன் மறந்து போன மற்றவர்களுக்குக் கடவுளாகிப் போனத் தமிழனை ஞாபகப் படுத்தி தமிழர்கள் ஒவ்வொருவரையும் கர்வப்பட வைக்கிறது.

விஷம் கலந்த உணவு என்று தெரிந்தும், தன் உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டால் அங்கு எந்த தீங்கும் நேரிடாது என்று அங்குள்ளவர்கள் நம்புகிறார்கள் என்பதற்காக அந்த உணவினைச் சாப்பிட்டு சமாதியாகிப் போகும் போதி தர்மனின் தியாகம் மெய்சிலிர்க்க வைக்கிறது. பொது நலத்திற்காக சமாதியானவர்கள் சாமி ஆகிவிடுகிறார்கள். போதி தர்மனும் சீனா முழுமைக்கும் சாமி ஆகிவிடுகிறார். போதி தர்மனின் சிலை முன் வணக்கம் செலுத்தும் சீனாக்காரனைப் பார்க்கும் போது நமக்கு நிச்சயமாக கர்வம் தலைகேறுகிறது. தடுக்கி விழுந்தால்- அட இவ்வளவு ஏன் சிலைகள் தடுக்கித்தானே இங்கே நாம் விழவே வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு பார்க்கும் இடமெல்லாம் யார் யாருக்கெல்லாமோ சிலை இருக்கும் தமிழகத்தில் போதி தர்மனுக்கு ஒரு சிலை கூட கிடையாது!!!

பள்ளி மாணவர்களுக்குத் தேவையில்லாத பாடத்திட்டங்களைச் சேர்த்து அடுத்து வரும் அரசாங்கத்தால் அதனை ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டிய அளவிற்குப் பாடத்திட்டங்கள் தயாரிப்பவர்கள் போதி தர்மனை மறந்தது ஏனோ..? நம் நாட்டில் முதலில் மனிதக் காக்கைகள் ஒழிய வேண்டும் அல்லது ஒழிக்கப் பட வேண்டும்.

சூர்யா தான் ஏற்றுக் கொண்ட சவாலான கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். ஸ்ருதிஹாசன் அதிபுத்திசாலித்தனமான இளம் மரபணு விஞ்ஞானியாகச் சிறப்பாக நடித்திருக்கிறார். சாருஹாசன் கமல்ஹாசன் இருவரையும் சேர்ந்து செய்த கலவையாகச் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.சூர்யா, ஸ்ருதிஹாசனுக்கு யானையில் லிப்ட் கொடுப்பது அழகானக் கற்பனை, காட்சியாக்கம். ஆப்பரஷேன் ரெட் கொஞம் பலவீனமானக இருப்பது, அதனை முறியடிக்கச் செய்யும் போது நடக்கும் சம்பவங்கள், பொழுதுபோக்கிற்காகவேத் திணிக்கப்பட்டது போன்ற பாடல்காட்சிகள், அதான் சூர்யா நல்லா ஆடுபவர் என்று நிரூபிச்சிடார்ல அப்புறம் ஏன் சோகப்பாட்டுல கூட அவரை ஆட வைக்கவேண்டும்..? இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமோ…? இருந்தாலும் கருத்தினைச் சொல்லிய விதத்தில் 7 ஆம் அறிவு மிகச் சிறப்பான படமே.

ஒவ்வொரு தமிழனின் தாத்தாவோட தாத்தாவோட தாத்தோவோட தாத்தாவோட தாத்தாவோட தாத்தோவோட தாத்தாவோட தாத்தாவோட தாத்தாவோட தாத்தோவோட தாத்தாவோட தாத்தாவோட தாத்தாவும் ஏதாவது ஒரு வகையில் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்திருப்பவர்கள் தான் என்பதை உணர்ந்து இன்று அவர்களது டி.என்.ஏவுடன் வாழும் நாமும் சிறப்பாக வாழ முற்பட வேண்டும் என்கிற கட்டாயத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்படுத்தியிருக்கிறார்.

தமிழனாகத் தலை நிமிர்ந்து வாழ்வோம். இன்றும் மனிதனைக் கொன்று நரமாமிசம் உட்கொள்ளும் சீனக்காரன் 1600 வருடங்களுக்கு முன் எப்படி இருந்திருப்பான்..? யோசியுங்கள் அவர்களை இன்று மனிதனாக்கியப் பெருமை ஒரு தமிழனுக்குத்தான் என்பதில் நாம் எல்லாம் பெருமைப் படவேண்டாமா..? வாழ்வியல்,யோகம்,விஞ்ஞானம், மருத்துவம், வீரம், பண்பாடு, மொழியாற்றல் போன்ற அனைத்திலும் நாம் தான் முன்னோடிகள் அந்த வகையில் உலகில் மற்றவர்களுக்கு ஆறறிவு என்றால் தமிழனுக்கு நிச்சயம் ஏழறிவு என்பதனை உணர்த்தும் படமாக 7 ஆம் அறிவு.

Friday, 9 December 2011

இதயத்தை காப்பாற்றும் வழி!

உங்கள் நாடித்துடிப்பைத் தெரிந்து கொள்வதன் மூலம் இதயத்தைக் காப்பாற்ற வழி இருக்கிறது.
1. உங்கள் நாடித்துடிப்பை எங்கே உணர முடியும்?
மணிக்கட்டில், அதாவது கட்டை விரலுக்குச் சற்று கீழே. இதுவே மிக எளிதாக உங்கள் நாடித்துடிப்பை உணரக் கூடிய இடம்.
2. ஏன் உங்கள் நாடித்துடிப்பை பரிசோதனை செய்ய வேண்டும்?
முக்கியமான காரணம் உங்கள் நாடித் துடிப்பின் எண்ணிக்கையை அறிந்து கொள்வது. இதன் மூலம் இதயம் சீராகச் சரியான எண்ணிக்கையிலும் துடிக்கிறதா என்று  அறிந்து கொள்ள முடியும்.
3. எப்போது நாடித்துடிப்பைப் பரிசோதனை செய்யலாம்?
நீங்கள் நல்ல ஓய்வில் இருக்கும்போது, காஃபின், நிக்கோடின் போன்ற ஊக்கிகளைப் பயன் படுத்தாது இருக்கும் போதும்.
4. நாடித்துடிப்பின் இயல்பான அளவு என்ன?
ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 100 வரை. உங்கள் மன அழுத்தம், நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற மருந்துகள் போன்ற வற்றால் உங்கள் நாடித்துடிப்பு குறையவோ,  கூடவோ செய்யலாம்.
5. எப்பொழுது நாடித்துடிப்பு சம்பந்தமாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்?
நாம் ஒவ்வொருவரும் தனித்தனியான இயல்பு உள்ளவர்கள். ஆகவே பொது வான ஒரு வரையறையைச் சொல்வது கடினம். நாடித்துடிப்பு சிலருக்கு 100க்கு மேல் இருக்கலாம். சிலருக்கு 60க்குக் கீழ் இருக்கலாம். தொடர்ந்து 120க்கு மேல் இருந்தாலோ அல்லது தொடர்ந்து 40க்குக் கீழ் இருந்தாலோ நீங்கள் மருத்துவ ஆலோசனையைப்  பெற வேண்டியது அவசியம்.
உங்கள் நாடித்துடிப்பு என்பது உங்கள் இதயம் துடிக்கிற அளவு. இதை இதயத் துடிப்பு அளவு (ஹார்ட் ரேட்) என்கிறோம். ஒரு நிமிடத்திற்கு உங்கள் இதயம் துடிக்கிற  எண்ணிக்கையின் அளவு இது.
இதயத்துடிப்பு நபருக்கு நபர் வயது, மனநிலை, செய்கிற வேலையைப் பொறுத்து மாறுபடும். இதயத்துடிப்பு, நாடித்துடிப்பு இவற்றின் எண்ணிக்கை மாறுபடுவது, சீரற்ற தன்மை  இரண்டுமே இருதய நோய் களாலோ அல்லது இருதயம் தொடர் புடைய வேறுசில பிரச்னைகளாலோ ஏற்படலாம். இதனை இதயத்தின் சீரற்ற தன்மை  கார்டியாக் அரித் மியா என்று சொல்கிறோம். ஆகவே உங்கள் நாடித் துடிப்பை அறிந்து கொள்வது உங்கள் இதயத்தை அறிந்து கொள்வது ஆகும்.
இதயத்துடிப்பின் சீரற்ற நிலை
இந்நிலை மிகவும் ஆபத்தானது. ஆனால் சிகிச்சை
மூலம் சீர் செய்யக் கூடிய நிலை. இந்த நிலையில் இதயத்தைச் செயல்படுத்துகிற மின் துடிப்புகள் ஒன்றுடன் ஒன்று  சரியான முறையில் இணைந்து செயல்படாமல் இருக்கும். இதனால் இதயம் அதிக வேகத்திலோ அல்லது மிகக் குறைவான வேகத்திலோ அல்லது ஒழுங்கற்ற முறையிலோ  துடிக்கக் கூடும்.
இதயத்துடிப்பின் சீரற்ற நிலையின் வகைகள்
இதில் பல வகைகள் இருக்கின்றன. PSVT என்கிற ஒரு வகை பொதுவாக காணப் படுகிற வகை. இதில் இதயத்தின் அதிகத் துடிப்பு இதயத்தின் மேற்பகுதி அறை  களில் இருந்து ஏற்படுகிறது. மற்றொரு வகை கிதி என்பது. இதில் இதயத்தின் மேல் பகுதி அறைகளில் இருந்து அதைவிட மிக அதிகமான மேலும் ஒழுங்கற்ற துடிப்புகள்  ஏற்படும். க்ஷிஜி மற்றொரு வகை. இதில் அதிக துடிப்பு இதயத்தின் கீழ்ப் பகுதி அறைகளில் இருந்து ஏற்படும். இது உயிருக்கு ஆபத்தானது.
இதயத்துடிப்பின் சீரற்ற நிலைகளை ஏற்படுத்தும் பொதுவான காரணங்கள்
ரத்தக் கொதிப்பு, புகை பிடிப்பது, குடிப்பழக்கம், கட்டிகள் போன்றவை இதயத்துடிப்பின் சீரற்ற நிலை ஏற்படு வதற்கு மிகப் பரவலான காரணங்கள். தவிர இருதய ரத்தக் கு ழாய் நோய்கள், இருதய வால்வு பிரச்னைகள், இருதயத் தசைகளைத் தாக்கும் நோய்கள், இருதயத் துடிப்பு உருவாகும் இடத்தில் ஏற்படும் நோய்கள், இருதயத்தைச் சுற்றி  இருக்கிற உறையில் ஏற்படும் அழற்சி சிளிறிஞிஎன்கிற நீண்ட நாள் மூச்சுக்குழல் அடைப்பு நோய்கள் போன்றவையும் இதயத் துடிப்பின் சீரற்ற நிலை உருவாகக்  காரணங்களாக அமைகின்றன.
இதயத்துடிப்பின் சீரற்ற நிலையின் அறிகுறிகள்.
படபடப்பு, விட்டு விட்டு நாடித்துடிப்பு, தலைப் பாரம் மற்றும் லேசான தலை சுற்றல், தளர்ச்சி, மூச்சு வாங்குதல், மயக்கம் அல்லது மயக்கம் வருகிற நிலை ஆகியவை.
இதயத்துடிப்பு சீரற்ற நிலையின் தொடர் நிகழ்வுகள்
பெரும்பாலான இதயத்துடிப்பு சீரற்ற நிலை பொதுவாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் சில ஆபத்தான வை. உயிருக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவை. இதயம்  சீரற்றுத் துடிக்கும் போது போதுமான அளவு ரத்தத்தை உடல் முழுவதும் செலுத்த முடியாமல் சிரமப்படும். போதுமான ரத்தம் கிடைக் காமல் மூளை, இதயம் மட்டுமல் லாமல் மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும். ஏற்றிரியல் சுப்ரலேஷன், ஏற்றிரியல் ஃப்ளட்டர் என்னும் இரண்டு வகை மிகப் பரவலாகக் காணப் படுகின்றன. இவை இதய  மேற்புற அறைகளில் இதய ரத்தம் சேர்வதற்கு வழி செய்வதன் மூலம் ரத்த உறைவு ஏற்படுகிற நிலையை அதிகரிக்கின்றன. இதனால் பக்கவாதம் வருகிற பாதிப்பு  அதிகரிக்கிறது.
மிக ஆபத்தான இதயத்துடிப்பு சீரற்ற நிலையைக்கூட வெற்றிகரமாக சிகிச்சை செய்து சரிப்படுத்த முடியும். இந்நிலை யில் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் வழக்கமான  ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதயத்தின் இந்நிலையை முன்பே அறிந்து கொள்வது தான் மிக முக்கியமானது. உங்கள் நாடித் துடிப்பைத்  தொடர்ந்து பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் உங்களுக்கு இந்தப் பிரச்னை உள்ளதா என்று தெரிந்து கொள்ள முடியும்.
இதயத்துடிப்பு சீரற்ற நிலைக்கான சிகிச்சை
இதற்கான சிகிச்சை வகைகளைப் பொறுத் தும், எவ்வளவு ஆபத்தானது என்பதைப் பொறுத்ததும் மாறுபடும். மருந்துகள் வாழ்க்கை முறை மாற்றம், மின் அலைக் கருவிகள்  பயன்படுத்தும் சிகிச்சை போன்றவை உண்டு. மின் அலைக் கருவியைப் பயன் படுத்தி சிகிச்சை செய்வதால் வாழ்க்கை முழுவதும் மருந்துகள் சாப்பிடுவதைத் தவிர்க்க  முடியும்.
நாடித்துடிப்பை எப்படி பரிசோதிப்பது?
உங்கள் ஆள் காட்டி, இரண்டாவது, மூன்றாவது விரல்களின் நுனிகளை அடுத்த கையின் மணிக்கட்டின் கட்டை விரலின் அடிப்பாகத்திற்குச் சற்று கீழே வைக்கவும். விரல்களை லேசாக அழுத்தவும். நாடித் துடிப்பை இப்போது உணர முடியும்.
ஒரு கடிகாரத்தைப் பயன்படுத்தி 30 வினாடிகளுக்கு எத்தனை நாடித் துடிப்பு என்று கணக்கிடுங்கள். இதனை இரண் டால் பெருக்கவும். வருகிற விடையே உங்கள் நாடி த்துடிப்பு.
உங்கள் நாடித்துடிப்பு ஒழுங்கற்று இருந் தால் தொடர்ந்து ஒரு நிமிடத்திற்கு கணக் கிடுங்கள். முப்பது விநாடிகளில் நிறுத்த வேண்டாம்.

நீங்கள் Gmail பயன்படுத்துபவரா?

நீங்கள் Gmail கணக்கு பயன்படுத்துபவரா?

அப்படியா
னல் இதனை கண்டிப்பாக படியுங்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் கணக்கு முடக்கப்பட்டாலோ அல்லது உங்களது மெயில்களை நீங்களே தவறுதலாக் அழித்துவிட்டாலோ என்னசெய்வது முக்கியமான மெயில்களை எவ்வாறு மீட்பது இனிமேல் அந்தக்கவலை வேண்டாம் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள மென்பொருளினை தறவிரக்கி உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள் அவ்வளவுதான்.
உங்கள் மெயில்கள் எல்லாவற்றையுமாயினும் சரி குறிப்பிட்டவற்றை மட்டுமாயினும் சரி இந்த gmail backup மென்பொருளின் இதவியுடன் backup செய்து உங்களிட்குத் தேவை
யான் இடத்திலொ அல்லது USB போன்றவற்றிலோ செமித்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள் இதன் சிறப்பம்சம் என்னவெனில் இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமானது இதனை பதிவிரக்க கீழ் உள்ள லிங்கில் கிளிக் செய்யுங்கள்.
DOWNLOAD
                உங்கள் கணனியில் நிறுவியதும் இங்கு உள்ளபடத்தில் இருப்பதுபோன்று காணப்படும் அதில் உங்கள் மெயில் முகவரி,கடவுச்சொல் அதன்பின் எங்கு சேமிக்க வேண்டும் எனதெரிவுசெய்யுங்கள் அவ்வளவுதான் குறிப்பிட்ட திகதிகளில் வந்த மெயிலினை மட்டும் backup எடுக்க வேண்டுமாயின் அதில் இருக்கும் newset emailonlyl என்பதில் இருக்கும் டிக்கினை எடுத்துவிட்டு உங்களிட்கு தேவையான திகதியினை தெரிவு செய்துகொள்ளுங்கள்

மூளை சுறுசுறுப்புடன் இருக்கும் மீன் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்

நியூசிலாந்தின் மஸ்ஸே யுனிவர்சிட்டி பேராசிரியர் வெல்மா ஸ்டோன்ஹவுஸ் தலைமையிலான குழுவினர், ஞாபக சக்திக்கும், மீன்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக 176 பேரை தேர்ந்தெடுத்து அவர்களின் ஞாபக சக்தி, அறிவுக் கூர்மை ஆகியவற்றை மதிப்பீடு செய்தனர். பின்னர், இவர்களுக்கு வஞ்சிரம், இறால் உள்ளிட்ட பல்வேறு வகையான கடல் மீன் உணவுகளை தொடர்ந்து 6 மாதங்கள் கொடுத்து ஆய்வு செய்தனர். 
மீண்டும் அவர்களிடம் ஞாபக சக்தி, அறிவுக் கூர்மை ஆகியவற்றை பரிசோதித்தபோது, ஞாபக சக்தி 15 சதவீதம் அதிகரித்திருந்தது தெரிய வந்தது. அதாவது, மீன்களில் எண்ணெய் வடிவில் உள்ள ஒமேகா&3 என்ற கொழுப்பு அமிலம் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Ôஇந்த அமிலம் மனித உடலில் உருவாகாது. எனவே, மீன்களை சாப்பிடுவதன் மூலமே இதைப் பெற முடியும். இது வாழ்நாள் முழுவதும் மூளை யின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியமாகிறது. மூளை சுறுசுறுப்பாக இருக்கவும், மனநலம் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறதுÕ என ஸ்டோன்ஹவுஸ் தெரிவித்துள்ளார்.

Thursday, 8 December 2011

Thoughts of change

- Go on that trip. Don't postpone it.
- Say those words. Don't let the moment pass.
- Do what you have to, even at society's scorn.
- Write poetry.

- Love deeply.
- Walk barefoot.
- Dance with wild abandon.
- Cry at the movies.
- Take care of yourself. Don't wait for someone to take care of you.

Go for the win.

Wednesday, 7 December 2011

Best xample for ABS...


An anti-lock braking system (ABS, from German: Antiblock...iersystem) is a safety system that allows the wheels on a motor vehicle to continue interacting tractively with the road surface as directed by driver steering inputs while braking, preventing the wheels from locking up (that is, ceasing rotation) and therefore avoiding skidding.
An ABS generally offers improved vehicle control and decreases stopping distances on dry and slippery surfaces for many drivers; however, on loose surfaces like gravel or snow-covered pavement, an ABS can significantly increase braking distance, although still improving vehicle control.[1]
Since initial widespread use in production cars, anti-lock braking systems have evolved considerably. Recent versions not only prevent wheel lock under braking, but also electronically control the front-to-rear brake bias. This function, depending on its specific capabilities and implementation, is known as electronic brakeforce distribution (EBD), traction control system, emergency brake assist, or electronic stability control (ESC).

Monday, 5 December 2011

இதயத்தை பலப்படுத்தும் சீத்தாப்பழம்

சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது.சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. ஆங்கிலத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும். இதன் தாவரவியல் பெயர்- Annona squamosa என்று பெயர்.
*சீத்தாப்பழத்தில்- நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.
மருத்துவ பயன்கள்:
1. சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.
2. சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.
3. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.
4. விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்;து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.
5. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.
6. சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.
7. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.
8.சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.
9.சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.
10 சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்

மிகப் பெரிய கோப்புகளை அனுப்புவதற்கு

ஒரு பெரிய கோப்புக்களை மின்னஞ்சலில் அனுப்ப மிகவும் தடுமாறுகிறோம். கட்டணம் செலுத்தாமல் yahoo, gmail, hotmail போன்றவை 10MB க்கு மேல் பொதுவாக அனுமதிப்பதில்லை.
கட்டணம் செலுத்தாமலேயே SendTool என்ற இணையதளத்தின் மூலம் மிகப் பெரிய கோப்புகளை அனுப்பலாம்.
SendTool மூலம் உங்கள் கோப்புகளையும்(File) படங்களையும் பதிவேற்றம் செய்து விட்டு கிடைக்கும் தரவிறக்க சுட்டிகளை(Download link) மட்டும் நண்பருக்கு மின்னஞ்சலில் அனுப்பினால் போதும். இங்கு கடவுச்சொல் அமைத்துக் கொள்ளும் வசதியும் உண்டு.
DOWNLOAD LINK

எளிதாய் கிடைக்கும் உணவுப் பொருட்களை வைத்து ஆரோக்கியமாக வாழலாம்

வீட்டில் எளிதாய் கிடைக்கும் உணவுப் பொருட்களை வைத்து ஆரோக்கியமாக வாழ பழகிக்கொள்ளுங்கள்.
கொண்டைக் கடலை சுண்டல் ஒரு கப் மற்றும் 100 கிராம் தேங்காய் சாப்பிட்டு வந்தால் துத்தநாக உப்பு பெற முடியும். இது நமது கை நகங்களையும், தோலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் பூசணிக்காயில் உள்ள வைட்டமின் ஏ புற்று நோய் வராமல் 70 சதவீதம் பாதுகாப்பளிக்கிறது. சிறநீரக கற்கள் ஏற்படாமல் தடுக்கும் வல்லமையும் பூசணிக்காய்க்கு உண்டு.
வாழைப்பழத்தின் மருத்துவ குணம்…
எளிதில் கிடைக்கும் பழ வகைகளில் ஒன்று வாழைப்பழம். மருத்துவ குணம் நிறைந்த பழமாக வாழைப்பழம் திகழ்கிறது. ஆப்பிளில் உள்ளதை விட 4 மடங்கு கார்போ ஹைடிரேட்டும், 3 மடங்கு பாஸ்பரசும், 5 மடங்கு வைட்டமின் ஏ வும் மற்றும் இரும்புச் சத்தும் இதில் நிறைந்துள்ளன. ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் உப்பான பொட்டாஷியம் வாழைப்பழத்தில் ஏராளமாக அடங்கி உள்ளது. உடனடி உற்சாகத்தையும் பயனையும் தரக்கூடியது இப்பழம்.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்தி தொடர்ச்சியாக காய்ச்சலில் படுப்பதை தடுக்கும் ஆற்றல் வாழைப்பழத்திற்கு உண்டு. வாழைப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்த சோகையையும், பொட்டாசியம் ஸ்ட்ரோக்கையும் தவிர்க்கும் வல்லமை பெற்றுள்ளது.
வாழைப்பழம் ஞாபக சக்தி, மூளையின் சக்தி அதிகரிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலும் இவற்றிற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

தூக்கம் வரலையா? செர்ரி ஜூஸ் குடிங்க : ஆய்வு தகவல்!

சோறு, தண்ணீர் போல தூக்கமும் மிகமிக அவசியமானது. போதுமான அளவு தூக்கம் இல்லாவிட்டால் இயல்பு நிலை பாதிக்கப்படும். இந்த பாதிப்பை ‘இன்சோம்னியா’ என்கிறது மருத்துவ உலகம். இந்த பாதிப்பில் இருந்து விடுபட உலகம் முழுவதும் தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஏராளமான பரிந்துரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கிலாந்தின் நார்த்அம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் இதுதொடர்பான ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. நன்கு தூக்கம் வருவதற்கு ஆராய்ச்சியாளர்கள் தரும் அட்வைஸ் இது:
கடின உழைப்புக்கு பின்பு இரவில் உறக்கம் இன்றி அவதிப்படுவது அடுத்த நாளின் இயல்பு வேலைகளை பாதிக்கும்.
இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும்போது மன உளைச்சல் ஏற்பட்டு நோயாளியாக மாறும் நிலை ஏற்படும் சாத்தியங்களும் அதிகம். தூக்கமின்மை என்பது சாதாரணமாக விடக்கூடியது அல்ல. அதை உடனே சரிசெய்ய வேண்டும். நமது உணவு, பழக்க வழக்கங்கள் காரணமாக தூக்கம் பாதிக்கப்படலாம். இதற்கு மருந்து, மாத்திரைதான் சாப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை. படுக்கைக்கு செல்லும் முன்பு தினமும் ஒரு கிளாஸ் செர்ரி பழச்சாறு குடித்தால் நன்கு தூக்கம் வரும் என்று கண்டறியப்பட்டுள்ளது. செர்ரி ஜூஸ் குடித்தவர்கள் கூடுதலாக 25 நிமிடம் தூங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொழுப்பை குறைக்கும் செம்பருத்தி!

மருத்துவ குணமுள்ள செம்பருத்தி பூவின் நிறம் மற்றும் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. ஏராளமான நிறங்கள், ஒற்றை மற்றும் அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன.
கண்ணை கவரும் இதன் சிவப்பு நிறத்தால் தோட்டத்தில் மற்ற செடிகளுக்கு இடையில் பளீரென அழகாக தோற்றமளிக்கும்.
வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் இதில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.
தேங்காய் எண்ணையில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும்.
இங்கிலாந்தை சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்த தகவல்கள் இவை. இதை நேரடியாகவோ மறைமுகமாகவோ உட்கொண்டால் கிடைக்கும் பலன் மற்றும் பயன்களை பட்டியலிட்டுள்ளனர்.
அதன் விபரம்: உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது.
சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது.
இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

ஆரோக்கியமான வாழ்விற்கு காலை உணவு

ஆரோக்கியமான வாழ்விற்கு காலை உணவு மிகவும் முக்கியமானது என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 

இது குறித்து பிரிட்டனின் சிக்ரிட் கிப்சன் தலைமையிலான குழு ஆய்வுகளை நடத்தியுள்ளன.
இந்த ஆய்வு முடிவு பற்றித் தெரிவித்துள்ள குழுவின் அறிக்கையில் மற்ற உணவு மற்றும் அதிலிருந்து கிடைக்கும் சத்துகள் ஆகியவற்றை காலை உணவு தான் நிர்ணயிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்கள்.
பருப்பு வகைகள் மற்றும் பால் ஆகியவற்றைக் காலையில் உட்கொண்டு வருவதனால் உடலுக்கு நோய் இல்லாமல் பாதுகாக்கின்றது எனக் கூறப்படுகின்றது.
19 முதல் 64 வயது வரையில் உள்ளவர்களின் 12 ஆயிரத்து 68 மருத்துவ ஆவணங்களைப் ஆய்வு செய்தே இந்த முடிவுக்கு மருத்துவக் குழு வந்திருக்கிறது.
இந்த மருத்துவக்குழுவின் அறிக்கையின் படி, பெரும் பாலானவர்கள் திட உணவுக்கு முன்பாக கோப்பி அல்லது தேநீர் போன்றவற்றை அருந்த விரும்புகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
பால் மற்றும் பருப்பு வகைகள் கல்சியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் ஆகியவற்றைத் தரும் என்பதால் அவற்றை எடுத்துக் கொள்வதே நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

VLC Playerயில் குறிப்பிட்ட வீடியோ பகுதியை மட்டும் வெட்டி எடுப்பதற்கு..

கணணி பயன்படுத்துபவர்கள் அனைவரும் VLC Playerஐ பற்றி அறிந்திருப்பார்கள். அத்துடன் பயன்படுத்தவும் செய்யலாம்.


VLC Player ஐப் பயன்படுத்தி காணொளி ஒன்றின் (Video) தேவையான பகுதி ஒன்றை எவ்வாறு வெட்டி எடுக்கலாம் என்று காண்போம்.
VLC Player இல் காணொளி ஒன்றை திறந்து கொள்ளுங்கள். பின் View->Advanced Controls என்பதை தெரிவு செய்யுங்கள்.
நீங்கள் தெரிவு செய்தவுடன் சில பொத்தான்கள் தோன்றும். இப்போது காணொளியின் தேவையான இடத்தில் Record பொத்தானை அழுத்துங்கள்.
பின் வெட்ட வேண்டிய பகுதியின் இறுதிப் பகுதி வந்ததும் மறுபடியும் Record பொத்தானை அழுத்துங்கள்.
இப்போது காணொளியின் வெட்டப்பட்ட பகுதி உங்கள் கணணியில் சேமிக்கப்பட்டுவிடும்.
இயங்கு தளம் Windows 7 எனில், My Videos இல் சேமிக்கப்படும் இந்த வீடியோ பகுதி சேமிக்கப்பட்டு விடும். இந்த முறையைப் பயன்படுத்தி ஒலிக்கோப்புகளில் இருந்தும் தேவையான பகுதியை வெட்டி எடுக்கமுடியும்.

முதலுதவி அளிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்


ஒரு கையோடு இருந்தால் போதும். எல்லா சந்தர்ப்பங்கம் நாமாகவே சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று நினைத்துவிடாதீர்கள். காரணம் சிகிச்சை முறைகள் நபருக்கு மாறுபடும். சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். ஆனாலும் சில பொதுவான விதிகளை மட்டுமே இங்கே தொகுத்துள்ளோம்.
முதல் கட்டமாக, முதலுதவி செய்பவர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் மூன்று:
1.உயிரைப் பாதுகாக்க வேண்டும்.
2.நிலைமை மோசமாவதைத் தடுக்க வேண்டும்.
3.சீக்கிரத்தில குணமளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
எல்லாவற்றையும் விட முக்கியமானது தைரியம். பாதிக்கப்பட்டவர்களைத் தேற்றி, ஆறுதல் சொல்ல வேண்டும். பயப்படக் கூடாது. தவிரவும் வேறு சில பொறுப்புகளும் உள்ளன.
1. உடனடியாக நிலைமையை ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும். பதட்டப்படக் கூடாது. தகுந்த மருத்துவ  உதவி கிடைக்க உதவ வேண்டும்.
2. தீ விபத்தில் சிக்கிக் கொண்ட ஒருவருக்கு முதலுதவி அளிக்க வேண்டும் என்றால் முதலில் முதலுதவி அளிக்க முன்வருபவருக்குத் தன்னை பாதுகாக்கத் தெரிந்திருக்க வேண்டும். பிறகு, பாதிக்கப்பட்டவர், பிறகு அருகில் இருப்பவர்.
3. பாதிப்பின் தன்மையை சரியாக உணர்ந்துகொள் வேண்டும்.
4. உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளவர் மீது நம் கவனம் முதலில் திரும்ப வேண்டும்.
5. சம்பந்தப்பட்டவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கோ, வீட்டுக்கோ, மருத்துவரிடமோ அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். தக்க வாகனங்களைத் தயார் செய்ய வேண்டும்.
6. மருத்தவ உதவி கிடைக்கும்வரை சம்பந்தப்பட்டவருக்கு அருகேயே இருக்க வேண்டும்.
7. நம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டும்.
எப்படிச் சமாளிப்பது?
நிதானத்துடன், பதற்றமில்லாமல், இவை இரண்டும் மிக மிக முக்கயம். மேலும் சில குறிப்புகள் கீழே -
1. சூழ்நிலையை உணர்தல்
2. பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துதல்
3. அவசர சிகிச்சை அளித்தல்
4. உதவி பெறுதல்
5. மீண்டு வருதல்
அடிப்படை உயிர் பாதுகாப்பு முறை
1. பாதிக்கப்பட்டவர் உடன் இருப்பவர்கள் அனைவரும் பாதுகாப்பாக  இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பாதுகாப்பு முக்கியமானது.
பேச்சு மூச்சு இல்லையா?
கத்தி உதவி கேட்கவும்
காற்றோட்டம் ஏற்படுத்தவும்
சுவாசம் சீராக இருக்கிறதா?
அருகிலுள்ள அவசர சிகிச்சை எண்ணைத் தொடர்பு கொள்ளவு.
30முறை நெஞ்சை அழுத்தம் முறை
சுவாச மீட்டு (2முறை)
மீண்டும் 30 தடவை நெஞ்சை அழுத்தும் முறை
2. ஏதாவது அசைவு இருக்கிறதா என்று பார்க்கவும் எப்படி இருக்கிறீர்கள்? என்று தோளை அசைத்துக் கேட்கலாம்.
3. அ) அவரிடமிருந்து பதில் வந்தால்
வேறு ஆபத்து இல்லை என்னும் பட்சத்தில், அவர் முன்னர் இருந்த நிலையிலேயே இருக்க விடலாம்.
அவருக்கு என்ன பிரச்சனை என்று கண்டறிய முயற்சி செய்யுங்கள். உதவி கிடைக்குமா என்று பாருங்கள்.
அவ்வப்போது அவரைப் பரிசோதித்துக் கொண்டே இருங்கள்.
3) ஆ) அவரிடமிருந்து பதில்இல்லை என்றால்
உதவி கேட்டு கத்துங்கள்
சம்பந்தப்பட்டவரை பின்பக்கமாகத் திருப்பவும். அவர் மூச்சு விடுவதற்கு ஏற்ப தலையையும் மோவாய் கட்டையையும் உயர்த்தி வைக்கவும்.
தலையைச் சாய்த்து, மோவாயை உயர்த்துதல்
1) அவரது நெற்றியில் கை வைத்து தலையை பின்னுக்கு சாய்க்கவும்.
2) உங்கள் விரல் நுனியை மோவாய்கட்டையின் முனையில் வைத்து உயர்த்தவும்
தலையைச் சாய்த்து, மோவாய் கட்டையை உயர்த்துதல்
4. சீரான சுவாசம் இருக்கிறதா என்று சரிபார்த்தல்
மார்பில் ஏற்ற இறக்கம் இருக்கிறதா என்று கவனித்தல்
சுவாசிக்கும் சத்தம் கேட்கிறதா என்ற வாயை கவனித்தல்
முகத்துக்கு அருகே குனிந்து சுவாசத்தை கவனித்தல்
சுவாசத்தை கவனித்தல்
நினைவிழப்பு ஏற்பட்ட ஒரு சில நிமிடங்களுக்கு சுவாசம் தடைபடும். சுவாசிக்கும் இடைவெளி அதிகம் இருக்கும். இறைச்சல் இருக்கும். இதனைக் கூர்ந்து கவனிக்க வேண்டியது. அவசியம்.
சந்தேகம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நபரின் சுவாசத்தை பத்து விநாடிகள் தொடர்ந்து கண்காணிக்கவும். சிறிய தடங்கல் ஏற்பட்டாலும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம்.
5. அ) சுவாசம் சீராக இருந்தால் -
அவரது நிலையை மாற்றவும்
உதவி பெறவும். ஆம்புலன்ஸை வரவழைக்கவும்
தொடர்ந்து சீராக சுவாசிக்கிறாரா என்று கண்காணிக்கவும்.
குணமடையும் நிலை
5 அ) சுவாசம் சீராக இல்லை என்றால் -
அருகிலிருப்பவரிடம் சொல்லி உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைக்கவும். நீங்கள் தனியாக இருக்கும்பட்சத்தில், கீழ்க்கண்ட விஷயங்களைச் செய்யலாம்.
1. அவருக்கு அருகே முழங்காலிட்டு அமர்ந்துகொள்ளவும்.
2. ஒரு கையைப் பிரித்து அவரது நெஞ்சின் மையத்தில் வைக்கவும்.
நெஞ்சின் மையத்தில் கையை வைத்தல்
3. முதல் கையின் மீது மற்றொரு கையை வைக்கவும்.
முதல் கையின் மீது மற்றொரு கையை வைத்தல்
4.கை விரல்களை ஒன்றாகச் சேர்த்துக்கொள்ளவும். கவனம், அவரது நெஞ்சையோ மார்புக்கூட்டையோ அழுத்த வேண்டாம்
இரு கை விரல்களையும் சேர்த்துக் கொள்ளுதல்
5.செங்குத்தாக, சம்பந்தப்பட்டவரின் நெஞ்சுக்கு மேலாக நகர்ந்து, மார் எலும்பை  4 – 5 செ.மீட்டர் அழுத்தவும்
மார் எலும்பை 4 – 5 செ.மீட்டர் அழுத்துதல்
6. ஒவ்வொரு முறை அழுத்தி பின்பும், நெஞ்சில் உள்ள அழுத்தத்தை வெளியேற்றவும். அவ்வாறு செய்யும்போது, உங்கள் கைகளும் மார் எலும்பு இடையில் தொடர்பு இருக்க வேண்டும்.
7. ஒரு நிமிடத்துக்கு நூறு முறை அழுத்தலாம் (ஒரு விநாடிக்கு இரண்டு முறை என்னும் விகிதத்தைவிட கொஞ்சம் குறைச்சல்)
8. அழுத்தும்போதும், வெளியேற்றும்போதும் ஒரே மாதிரியான அவகாசம்தான் இருக்க வேண்டும்.
6 அ) நெஞ்சை அழுத்துவதையும் சுவாசத்தை மீட்பதையும் ஒன்றிணைத்தல்
30 அழுத்தங்களுக்குப் பிறகு, மீண்டும் தலையைச் சாய்த்து மோவாயை உயர்த்தவும்.
உங்கள் ஆள்காட்டி விரலையும் கட்டை விரலைவும் கொண்டு அவரது மூக்கை மெலிதாக அழுத்தவும்.
மோவாய் கட்டையை உயர்த்தியபடி, அவரது வாயை மெதுவாகத் திறக்கவும்.
தலையைச் சாய்த்து மோவாயை உயர்த்தும்போது, மூக்கையும் மெலிதாக அழுத்தவும்.
ஒரு முறை மூச்சை இழுத்து விட்டுவிட்டு, அவரது வாயோடு உங்கள் வாயைப் பொருத்துங்கள்.
அவரது வாயுக்குள் ஊத ஆரம்பியுங்கள். அப்போது அவரது நெஞ்சு உயர்கிறதா என்று கவனியுங்கள். இயல்பாக சுவாசிக்கும்போது நெஞ்சு எப்படி உயர்கிறதோ அப்படி உயர்ந்த பின், மீண்டும் ஊதுங்கள். இது சுவாசத்தை மீட்கும் வழி.
நெஞ்சு உயர்கிறதா என்று கவனித்தபடியே அவரது வாய்க்குள் ஊதுங்கள்
தலை சாய்ந்த நிலையிலும், மோவாய் உயர்ந்த நிலையிலும் இருக்கும்போது, உங்கள் வாயை அவரிடமிருந்து விலக்கிக் கொள்ளுங்கள். காற்று வெறியேறும்போது, அவரது நெஞ்சு கீழே இறங்கிறதா என்று கவனியுங்கள்.
உங்கள் வாயை அவரிடமிருந்து விலக்கிக் கொள்ளுங்கள். காற்று வெளியேறும்போது, அவரது நெஞ்சு கீழே இறங்குகிறதா என்று கவனியுங்கள்.
நன்றாக ஒரு முறை சுவாசித்துவிட்டு, மீண்டும் குனிந்து அவர் வாயில் ஊதுங்கள். மொத்தம் இரண்டு முறை, முன் இருந்த நிலையில் அவரைக் கொண்டு சென்று மீண்டும் 30 முறை நெஞ்சை அழுத்துங்கள்.
30 முறை நெஞ்சை அழுத்யி பிறகு, இரண்டு முறை சுவாச மீட்புச் செய்யலாம்.
அவர் இயல்பாக சுவாசிக்க ஆரம்பித்தால் ஒழிய இந்த முறைகளைக் கைவிட வேண்டாம்.
மேற்கண்ட வழிகளில் முயன்றும் சீரான சுவாசம் வரவில்லை என்றால், மீண்டும் முயற்சியைத் தொடரும் முன் கீழ்க்கண்டவற்றைச் செய்யவும்.
தடை செய்யும்படி அவர் வாயில் ஏதாவது உள்ளதா என்று பார்க்கவும்
போதுமான அளவுக்குத் தலை சாய்க்கப்பட்ட நிலையிலும் முகவாய்க்கட்டை உயர்த்தப்பட்ட நிலையிலும் உள்ளதா என்று சரிபார்க்கவும்
மார்பை அழுத்துவதற்கு முன்னால் இரண்டு முறைக்கு மேல் ஊத வேண்டாம்.
ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கும் பட்சத்தில், இரண்டு நிமிட இடைவெளிக்குப் பிறகு, மற்றொருவர் மார்பை அழுத்தும் பணியைச் செய்யலாம்.
6 ஆ) மார்பை அழுத்துதல் மட்டும்
சுவாச மீட்பு செய்வதில் உங்களுக்கு விருப்பமில்லாத பட்சத்தில், மார்பை மட்டும் அழுத்தவும்.
இடையில் நிறுத்தாமல் நிமிடத்துக்கு 100 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அவருக்கு சுவாசம் திரும்பி விட்டதா என்று பார்க்கவும், திரும்பவில்லை என்றால் மீண்டும் சிகிச்சையை தொடரவும்.
7. இதய இயக்க மீட்புப் பணியை  எது வரை தொடரலாம்?
தகுந்த பயிற்சி பெற்ற ஒருவர் வரும் வரை
பாதிக்கப்பட்டவர் சீராக மூச்சு விடும் வரை
நீங்கள் சோர்வடையும் வரை
மீட்பு நிலை
பாதிக்கப்பட்டவரை இப்படித்தாக் கிடத்தி வைக்க வேண்டும் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. ஆனால், அவர் நிலையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். சுவாசம் தடைபடாதபடி இருக்க வேண்டும்.
கீழ்க்கண்டவற்றைச் செய்யலாம்.
அவரது மூக்குக் கண்ணாடியை அகற்றவும்
அவரது கால்கள் நேராக நீட்டிக் கொண்டிருக்கின்றதா என்று கவனிக்கவும்.
அவருக்குப் பக்கவாட்டில் மண்டியிட்டு அமர்ந்து, கீழ்க்கண்ட படத்தில் உள்ளவாறு உங்கள் கைகளால் அவரது மணிக்கட்டையும் முழங்கைகையும் பற்றிக்கொள்ளவும்
உங்கள் கைகளால் அவரது மணிக்கட்டையும் முழங்கையைம் பற்றிக் கொள்ளவும்
மார்புக்குக் குறுக்காக அவரது கையை எடுத்துச் செல்லவும். அவரது கன்னத்தை ஒட்டியபடி உங்கள் கையை ஊன்றவும்.
மார்புக்குக் குறுக்காக அவரது கையை எடுத்துச் சென்று, அவரது கன்னத்தை ஒட்டியபடி உங்கள் கையை ஊன்றவும்.
மற்றொரு கையால் அவரது காலை மேல் நோக்கி உயர்த்தவும். கால் பாதம் தரையில் படும்படி இருக்க வேண்டும்.
மற்றொரு கையால் அவரது காலை மேல் நோக்கி உயர்த்தவும். கால் பாதம் தரையில் படும்படி இருக்க வேண்டும்.
உங்களது ஒரு கை அவரது கன்னத்தில் இருக்கிறது- அப்படியே, மற்றொரு கையால் அவரை பக்கவாட்டில் ஒருக்களித்தவாறு திருப்பி விடுங்கள்.
அவரது கால்களை மாற்றி வைக்கவும்
காற்று வழி தடைபடாதபடி தலை¬யைச் சரிசெய்யவும்.
காற்று வழி தடைபடாதபடி தலையைச் சரிசெய்யவும்
தேவைப்பட்டால், கன்னத்தின் கீழே உள்ள அவரது கையை சரி செய்யவும்.
மீட்பு நிலை
சுவாசத்தின் தொடர்ச்சியை பரிசோதிக்கவும்
ஒருக்களித்த நிலையிலேயே அரை மணி நேரத்துக்கு மேலாக அவர் இருக்க வேண்டும் என்னும் நிலையில், எதிர்பபுறமாக அவரைத் திருப்பி விடலாம்
ondragstart="return false" onselectstart="return false"