Thursday, 5 April 2012

படுத்ததும் தூக்கம் வர….! ஒரு ஆய்வின் தகவல்

படுத்ததும் தூங்கி விடுவது எல்லோருக்கும் சாத்தியமில்லை. சிலருக்கு படுத்ததற்கு நீண்ட நேரத்திற்குப் பின்னரே தூக்கம் வரும். அப்படியும் தூக்கம் வராதவர்கள் கவுண்டிங் ஷீப் செய்வதுண்டு. அதா வது, எளிதில் தூக்கம் வராதவர்கள் ஒன்றிலிருந்து 100…. 200….. 300 வரை எண்ணத்துவங்குவார்கள். அப்படி எண்ணிக்கொண்டிருக்கும் போதே தூக்கம் வந்து விடும் என்பது ஒரு நம்பிக்கை. இப்படி எண்ணுவதற்கு கவுண்டிங் ஷீப் என்று பெயர். இங்கிலாந்துகாரர்களுக்கு தூக்கம் பிடிப்பதற்கு குறைந்தது 37 நிமிடங்கள் ஆகிறது என்கிறது, இது குறித்த ஒரு ஆய்வு. அதற்காக அவர்கள் மெல்லிசையை விரும்பி கேட்கிறார்களாம். இந்த மெல்லிசையை கேட்டுக்கொண்டிருக்கும் போதே தூங்கிப் போவார்களாம்.
சுவாரசியமாக, இயற்கையான சப்தங்களை கேட்டுக்கொண்டே தூங்க முயற்சிப்பவர்களும் இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக  கிறீச் சிடும் பறவைகளின் ஒலிகள். மெல்லிய காற்றின் இரைச்சல், நீரோடையின் சலசலப்பு போன்றவை தூக்கத்தை எளிதில் வரவழைக்க பயன்படுபவையாக இருக்கின்றன என்கிறது இந்த ஆய்வு. இவற்றுக்கெல்லாம் மேலாக, இருக்கவே இருக்கிறது பழைமையான ஒரு முறை. அது தான் புத்தகம் படிப்பது. இதுவும் தூக்கத்தை வரவழைக்கிற விஷயங்களில் முக்கியமானதுதான். துணையுடன் பேசிக்கொண்டே தூங்கிப்போகிறவர்களும் இருக் கிறார்கள். விசித்திரமாக, கடிகாரத்தின் டிக் டிக் ஒசை, சாலையில் செல்லும் வாகனங்களின் சப்தம், வேக்குவம் க்ளீனர் மற்றும் ஹேர் ட்ரையரின் ஒலியும்  தூக்கத்தை வரவழைக்கும் செயல்  பட்டியலில் இடம் பெறுகின்றன. இவையத்தனைக்கும் வில்லனாக இருப்பது பக்கத்தில் தூங்குபவரின் குறட்டை சத்தம் என்று ஆத்திரப்படுகிறார்கள் உண்மையில் பாதிப்புக்குள்ளானவர்கள்.

இரத்த விருத்தியும் – பேரிச்சம் பழமும்

பழங்களிலேயே தனிச்சுவை கொண்டது பேரிச்சம் பழம். தரமான, நல்ல சத்துள்ள பேரிச்சம் பழங்கள் ஆப்ரிக்க, அரேபிய நாடுகளிலேயே விளைகிறது.
பேரிச்சம் பழத்திற்கு இரத்தத்தை விருத்தி செய்யும் ஆற்றலும், இரத்தத்தை வளப்படுத்தும் இயல்பும் உண்டு.
தினமும் இரவில் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டுவிட்டு பின் ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் போதும் இரத்தம் விருத்தி அடைவதோடு, உடலில் தெம்பும், வலிமையும் கூடும்.
உடலில் சர்க்கரைத் தன்மை குறைந்து சோர்வடையும் போது, சில பேரிச்சம் பழங்களைப் சாப்பிட்டாலே போதும் உடனே ரத்தத்தில் சர்க்கரைத் தன்மையை அதிகரித்து உடலை சமநிலைக்கு கொண்டுவரும்.
பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது. ஒரு அவுன்ஸ் பேரிச்சம் பழத்தில் 170 மில்லி கிராம் வைட்டமின் ஏ சத்து அடங்கியுள்ளது. மேலும் பி1 வைட்டமின் 26 மில்லி கிராமும், பி2 வைட்டமின் 9 மில்லி கிராமும் உள்ளது.
இரும்புச் சத்து 30 மில்லி கிராமும், சுண்ணாம்புச் சத்து 20 மில்லி கிராமும் உள்ளது.
பெண்களுக்குப் பொதுவாக கால்சியம் குறைபாடு அதிகம் ஏற்படுகிறது. இவர்கள் பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால் கால்சியம் குறைபாட்டை தவிர்க்க முடியும்.
மேலும், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் சோர்வையும் பேரிச்சம் பழம் உட்கொள்வதால் போக்க முடியும்.
இள‌ம் பெ‌ண்க‌ள் பெரு‌ம்பாலானவ‌ர்களு‌க்கு இர‌த்த சோகை உ‌ள்ளது. இதனா‌ல் குழ‌ந்தை‌ப் பேறு காலக‌ட்ட‌த்‌தி‌ல் பா‌தி‌ப்பு ஏ‌ற்படு‌கிறது. இதனை‌த் த‌வி‌ர்‌க்க பே‌ரி‌ச்ச‌ம் பழ‌த்தை உ‌ட்கொ‌ள்ளு‌ங்க‌ள் இர‌த்த சோகையை‌ப் போ‌க்‌கி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.
வளரு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு பே‌ரி‌ச்ச‌ம் பழ‌ம் கொடு‌த்து வ‌ந்தா‌ல் அது அவ‌ர்க‌ளி‌ன் ஆரோ‌க்‌கியமான வள‌ர்‌ச்‌சியை உறு‌தி செ‌ய்யு‌ம் எ‌ன்ப‌தி‌ல் ஐய‌மி‌ல்லை.
காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற பேரிச்சம் பழம் அதிகம் துணை புரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இளமை தரும் ஆரஞ்சு பழச்சாறு

என்றும் இளமையுடன் வாழ எவருக்குத்தான் ஆசை இருக்காது. தற்போது 20 வயது இளைஞன் கூட நாற்பது வயது அடைந்தவன் போல் காட்சி அளிக்கிறார்கள். தலைமுடி நரைக்கிறது. தோலில் சுருக்கம் ஏற்படுகிறது. கண்கள் குழிவிழுந்து காணப்படுகின்றன. நல்ல திடகாத்திரமான இளைஞர்களை இன்று காணமுடியவில்லை. இதற்குக் காரணம் இராசயனம் கலந்த உணவுகள், அரைவேக்காட்டு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள், சத்தற்ற உணவுகள், உடலுக்குத்தேவையான உடற்பயிற்சி இல்லாமை போன்றவையே.
இன்றைய மாணவ சமுதாயத்திற்கு கல்விச் சாலைகள் சிறைச்சாலைகளாக உள்ளன. பாடத்திட்டம் அனைத்தும் மூளை சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி, விளையாட்டு என்பதே இல்லை. மேலும் வீட்டிற்கு வரும் குழந்தைகளை கட்டாயப்படுத்தி சிறப்பு வகுப்புக்கு அனுப்புகிறார்கள். இதுபோல் விடுமுறை நாட்கள் பெரும்பாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே கழிந்துவிடுகின்றன. அடுத்த தெருவிற்கு செல்லவேண்டும் என்றாலும் வாகனத்தில்தான் செல்கிறோம். நடை என்பது பலருக்கு நோயின் தாக்கத்திற்குப் பிறகுதான் தெரியவரும்.
இப்படி சத்தற்ற உணவும், உடற்பயிற்சி யின்மையும் ஒரு மனிதனை முதுமையின் வாசலுக்கு எளிதில் அழைத்துச் செல்லும்.
உடற்பயிற்சி செய்வதுடன் உடலுக்குத் தேவையான சத்துக்களை நேரடியாகக் கொடுக்கும் பழங்களையும், பழச்சாறுகளையும் சாப்பிட்டு வந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம்.
எங்கும் எப்போதும் கிடைக்கும் ஆரஞ்சு பழச் சாறின் மருத்துவக் குணங்களையும், அதன் சத்துக்களையும் அறிந்துகொள்வோம்.
சில உணவுகள் சாப்பிட்டதும் அவை உடலில் சில மாற்றங்களை உண்டுபண்ணி பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இதனால் உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன.
இந்த பித்த நீர் இரத்தத்தில் கலந்து இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்துக்களை அழித்துவிடுகிறது. இதனால் இரத்தம் அசுத்தமடைகிறது. பித்த நீர் தலைக்கேறி கண் பார்வை நரம்புகளை பாதிப்படையச் செய்கிறது. மேலும் ஞாபக மறதி ஏற்படுகிறது. சருமம் பாதித்து சுருங்கச் செய்கிறது. தலைமுடி நரைக்கச் செய்கிறது. இதுபோல் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகளை 300 கலோரி அளவு சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து இரத்தத்தை பரிசோதித்துப் பார்த்தால் பித்த நீர் அதிகம் சுரந்து இரத்தத்தில் கலந்திருப்பதை அண்மையில் கண்டறிந்துள்ளனர்.
இந்த பித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று.
ஆரஞ்சு பழச்சாறு சாப்பிட்டவர்களின் இரத்தத்தில் பித்த நீரில் அளவு குறைவாக இருக்கிறது.
ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.
ஒரு சிலருக்கு திடீரென்று குடல் புண் தொண்டைப் புண் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் பிராய்லர் கோழி வறுவல், ஐஸ்கிரீம் மற்றும் கேக் வகைகளை அதிகமாக சாப்பிடுவதே. இதனால் உடல் சூடாகி வாயுக்கள் சீற்றமாகி புண்களை ஏற்படுத்துகிறது. சில சமயங்களில் இது புற்றுநோயாகக் கூட மாறலாம். இருதய நோய்களுக்கும் இந்த உணவு வகைகளே காரணமாகின்றன. இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடபட இந்த உணவுகளை தவிர்த்து தினமும் 150 மி.லி ஆரஞ்சு சாறை அருந்தி வரவேண்டும். இருமுறை கூட அருந்தலாம். ஆரஞ்சு பழத்தை தினமும் உண-வில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சியும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன.
ஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சுப் பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக உடலுக்கு வெப்பமும் சக்தியும் கிடைத்துவிடுகிறது.
நோயாளிகளுக்கும், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாறை கொடுக்கலாம். கைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மிலி வரை கொடுக்கலாம்.
ஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்துபோல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.
ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.
மேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாக 125 மிலி ஆரஞ்சு சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தி வந்தால் நுரையீரலில் உள்ள கோளாறுகள் நீங்கும்
நெஞ்சுவலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய்களையும் இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து குணப்படுத்தும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரஞ்சுப்பழம் கொடுத்து வந்தால் வாந்தி குணமாகும்.
ஆரஞ்சு பழச்சாறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.
ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது.
என்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு மிகவும் அவசியம்

மெல்லக் கொல்லும் புகைப் பழக்கம்

புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் உலக சுகாதார நிறுவனத்தால்,
மே 31ம் தேதி, சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. புகையிலை ஒழிப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. “புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும் அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே’ இத்தினத்தின் நோக்கம். புகையிலையால் கிடைக்கும் வருமானத்தை விட, புகையிலை பாதிப்பால் ஏற்படும் நோய்களை தீர்ப்பதற்கு, ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் அதிகம் செலவாகிறது.
ஆறு விநாடிக்கு ஒருவர் : மனித உயிர்களுக்கு இறப்பை அளிக்கும் இரண்டாவது முக்கிய காரணியாக புகையிலை கருதப்படுகிறது. புகையிலை என்றதும் நினைவிற்கு வருவது “சிகரெட்’. இதில் உள்ள நிக்கோடின் என்ற நச்சுப்பொருள் தான், புகைப்பவர்களை அடிமையாக்குகிறது. ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றில் 43,புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியவை. உலகளவில் 6விநாடிக்கு ஒருவர் புகையிலையால் பலியாகிறார். ஆண்டுக்கு 60 லட்சம் பேர், புகையிலை மற்றும் சிகரெட்டால் இறக்கின்றனர். 2030க்குள் இது ஒரு கோடியாக அதிகரிக்கும், என கணிக்கப்பட்டுள்ளது. இதில், 70 சதவீதம் பேர், வளரும் நாடுகளில் உள்ளனர், என உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
ஸ்டைல்‘ : வளர்ந்த மெட்ரோ நகரங்கள் மட்டுமல்லாமல் சிறிய நகரங்களிலும் வயது பாரபட்சம் இல்லாமல் “சிகரெட்’ பிடிக்கின்றனர். பெரும்பாலும் வேலைப்பளு,உடல் பருமனை குறைக்க புகைக்கின்றனர் என்றும், சிலர் “ஸ்டைலுக்காக’ புகைக்கின்றனர் என்றும் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
நிறுத்தினால் கிடைக்கும் நன்மைகள் : புகை பழக்கத்தை படிப்படியாக நிறுத்தாமல் ஒரேயடியாக நிறுத்துவதே சிறந்தது. இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது. புகைக்காமல் இருந்தால் ரத்த அழுத்தம், இருதயத்துடிப்பு,ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு சீரடையும். புகை பிடிக்காமல் ஒருநாள் இருந் தால், ரத்தத்தில் கலந் திருக்கும் கார்பன் மோனாக்சைடு வெளியேற்றப்படுகிறது. நுரையீரல் சுத்தமாகிறது. இரண்டு நாட்கள் இருந்தால்,உடலில் சேர்ந்துவிட்ட நிக்கோடின் அகற்றப்படும். சுவைக்கும் திறனும், நுகரும் திறனும் அதிகரிக்கும்.மூன்று நாட்களுக்கு பிறகு சுவாசிப்பது எளிதாகிறது. 2 முதல் 21 வாரங்களுக்குள் ரத்த ஓட்டம் சீரடைகிறது. 3 முதல் 9 மாதங்களுக்குள் இருமல், தும்மல் போன்ற குறைபாடுகள் குறைகிறது. நுரையீரலில் செயல்பாடு 5 முதல் 10 சதவீதம் அதிகரிக்கிறது. புகை பிடிப்பதை நிறுத்தி 4 ஆண்டுகளுக்கு பிறகு, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு, புகைப்பவர்களை ஒப்பிடும் போது பாதியாக குறைகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு நுரையீரல் புற்று நோய் வரும் வாய்ப்பு, புகைப்பவர்களை ஒப்பிட்டால் பாதியாக குறைகிறது.
புகைபிடிக்கும் பழக்கத்தை விட்ட முதல் வாரம் சிரமமாக இருக்கும். எனினும், இதனால் கிடைக்கும் பலன்,வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.
மறுப்போம்மறப்போம் மயானக்குச்சியை : இளம்வயதில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை,அதிகரித்து வருகிறது. ஒருநாளில் 10 சிகரெட் பிடிப்பவர் 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட நச்சுப் பொருளை உட்கொண்டு வெளியிடுகிறார். அவர் தன்னை கெடுப்பதுடன், மனைவி,குழந்தைகளையும் கெடுக்கிறார். பியூட்டேன், காட்மியம்,ஸ்டியரிக் ஆசிப், அம்மோனியா, நாப்தலமைன்,போலோனியம் உட்பட வேதிப்பொருட்கள் சிகரெட் புகையில் உள்ளன. இவை வெடிகுண்டு, பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கப் பயன்படுபவை. எனவே சிகரெட்டும் ஒரு வெடிகுண்டுதான்.
விளைவுகள்:புகைபழக்கம் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது. மாரடைப்பு, நுரையீரல் நோய், புற்றுநோய்,சர்க்கரை, பக்கவாதம், தமனிச்சுருக்கம் குறிப்பாக கால்,கை தமனிகள் அடைப்பு, ரத்தக்கொதிப்பு ஏற்படுகிறது. புகைபிடிப்போருக்கு மாரடைப்பால் இளவயதிலும் திடீர் மரணம் ஏற்படலாம். இது இருதய துடிப்பையும்,ரத்தக்கொதிப்பையும் கூட்டுகிறது. மூக்குப்பொடி,புகையிலை உண்பது, பீடி புகைப்பதும் சிகரெட்டுக்கு சமமானதே. ஆண்களுக்கு மலட்டுத் தன்மையும்,வீரியக்குறைவும் ஏற்பட வாய்ப்புள்ளது. புகை பிடிப்போரின் குழந்தைகளுக்கு சளி, இருமல், மூச்சுத் திணறல் ஏற்படலாம்.
நிறுத்தும் வழிகள்:* மனஉறுதியோடு ஆர்வத்தை அடக்க வேண்டும்.
* புகைபிடிப்பது தவறான செயல் என்பதை மனதில் நினைத்து பதியச் செய்ய வேண்டும்.
* புகைக்கும் ஆர்வம் ஏற்படும்போது சூயிங்கம்,
சாக்லெட், தண்ணீர் அருந்திவிட்டு நினைப்பை மாற்ற வேண்டும்.
* எலக்ட்ரானிக் சிகரெட், நிகோட்டின் கலந்த
கம், பேஸ்ட் பயன்படுத்தலாம்.
நிறுத்தினால் நன்மைகள்:* 20 நிமிடங்களில் ரத்தஅழுத்தம் குறைகிறது.
* எட்டு மணி நேரத்தில் ரத்தத்தில் கார்பன் மோனாக்சைடு குறைகிறது.
* 48 மணி நேரத்தில் மாரடைப்பு வரும் தன்மை குறைய துவங்கும்.
* 72 மணி நேரத்திற்கு பிறகு மூச்சுக்குழல் சுத்தமாகிறது.
* 3 முதல் 9 மாதங்களில் இருமல், சளி பிரச்னை குறைகிறது.
* ஒரு ஆண்டுக்குப் பின் மாரடைப்பு வரும் வாய்ப்பு பாதியாக குறைகிறது.
* 10 ஆண்டுகளுக்குப் பின் நுரையீரல்
புற்றுநோய் வரும் வாய்ப்பு அறவே இல்லாமல் போகிறது.
- டாக்டர் ஜெ.சங்குமணி, மதுரை. 98432 72876 .
புகைத்தால் புற்றுநோய் நிச்சயம் : *சிகரெட் போன்ற புகையிலை பொருளில் புற்றுநோயை உற்பத்தி செய்யும் நச்சுப் பொருட்கள் உள்ளன. இவை வாய், தொண்டை,மூச்சுக்குழாய், உணவுக் குழாய், சிறுநீர பாதை வரை எங்கு வேண்டுமானாலும் புற்றுநோயை ஏற்படுத்தும்.
* நுரையீரல் நோய் புற்றுநோய் ஏற்பட காரணம் புகைபிடிப்பதே.
* உலக மக்கள் தொகையில் ஆஸ்துமா 15 சதவீத மக்களையும், சி.ஓ.பி.டி., என்ற இளைப்பு நோய் 5 சதவீத மக்களையும் பாதித்துள்ளது. இதற்கு புகை பிடிப்பதும் காரணம்.
* சிகரெட் புகைப்பதால் நுரையீரல், 30 வயதில் 60வயதுக்குரிய தன்மையுடன் செயல்படும்.
* புகைப் பழக்கத்தை நிறுத்த தற்போது வாயில் மெல்லும் வகையில் சூயிங்கம், தோலில் ஒட்டிக் கொள்ளும் வகையில் நிகோட்டின் ஸ்டிக்கர் போன்றவை வந்துள்ளன.
- டாக்டர் எம்.பழனியப்பன். மதுரை
ondragstart="return false" onselectstart="return false"